Anshitha Anji
பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. 24 போட்டியாளர்களுடன் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இந்நிகழ்ச்சியில் தற்போது 10 போட்டியாளர்கள் மட்டுமே எஞ்சி உள்ளனர். கடந்த வாரம் முழுக்க பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஃப்ரீஸ் டாஸ்க் நடத்தப்பட்டு, அதில் போட்டியாளர்களின் குடும்பத்தார் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்று பாச மழை பொழிந்தனர். இதனால் கடந்த வாரம் முழுக்க சண்டை சச்சரவுகள் இன்றி சென்றது.
Bigg Boss Anshitha
பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே எவிக்ஷன் கட்டாயம் இருக்கும். அந்த வகையில் ஃப்ரீஸ் டாஸ்கின் முடிவில் இரண்டு போட்டியாளர்களை எலிமினேட் செய்து அதிர்ச்சி கொடுத்துள்ளார் பிக் பாஸ். அதன்படி இந்த சீசனில் பைனல் வரை செல்வார் என எதிர்பார்க்கப்பட்ட ஜெஃப்ரி கடந்த வாரம் எலிமினேட் ஆனார். அவரின் எலிமினேஷன் ரசிகர்களுக்கு மட்டுமின்றி பிக் பாஸ் போட்டியாளர்களுக்கும் பேரதிர்ச்சியாக இருந்தது. குறிப்பாக விஜய் சேதுபதியே ஜெஃப்ரியின் எலிமினேஷனில் உடன்பாடு இல்லாமல் இருந்தார்.
இதையும் படியுங்கள்... இது பிக் பாஸ் வீடா இல்ல சினிமா தியேட்டரா? அமரனை தொடர்ந்து ஒளிபரப்பப்பட்ட புதுப்படம்
Anshitha, VJ VIshal
ஜெஃப்ரியை தொடர்ந்து கம்மியான வாக்குகளை பெற்ற அன்ஷிதாவும் இந்த வாரம் எலிமினேட் செய்யப்பட்டார். பிக் பாஸ் வீட்டில் சண்டைக்கோழியாக இருந்து வந்த அன்ஷிதா, தர்ஷிகாவின் எவிக்ஷனுக்கு பின்னர் விஷால் உடன் ஓவர் நெருக்கமாகி, ஒருகட்டத்தில் இருவரும் காதலிக்க தொடங்கிவிட்டனர். இதனால் அப்செட் ஆன ரசிகர்கள், விஷால் அல்லது அன்ஷிதா ஆகிய இருவரில் ஒருவரை தூக்க முடிவு செய்து அன்ஷிதாவை எலிமினேட் செய்துள்ளனர்.
Anshitha Salary
84 நாட்களுக்கு பின் பிக் பாஸ் வீட்டில் இருந்து எலிமினேட் ஆகி உள்ள அன்ஷிதாவுக்கு பெரும் தொகை சம்பளமாக வழங்கப்பட்டு இருக்கிறது. இவருக்கு ஒரு நாளைக்கு ரூ.25 ஆயிரம் சம்பளமாக வழங்கப்பட்டதாம். அதன்படி மொத்தம் இருந்த 84 நாட்களுக்கு 21 லட்சம் சம்பளமாக அன்ஷிதா பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. அன்ஷிதா விஜய் டிவியில் ஒளிபரப்பான செல்லம்மா சீரியலில் நடிகர் அர்னவ்வுக்கு ஜோடியாக நடித்து வந்தார். அதுமட்டுமின்றி குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் கோமாளியாகவும் கலந்துகொண்டார். தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பட்டிதொட்டியெங்கும் பேமஸ் ஆகி உள்ளார் அன்ஷிதா.
இதையும் படியுங்கள்... பணப்பெட்டி மிஸ் ஆனா என்ன; ஜெஃப்ரிக்கு பிக் பாஸ் வாரி வழங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?