யூடியூப்பில் ஸ்பூஃப் வீடியோக்களை வெளியிட்டு அதன் மூலம் பிரபலம் ஆனவர்கள் கோபி - சுதாகர். ஆரம்பத்தில் அரசியல் தலைவர்களை கிண்டலடித்து வீடியோ வெளியிட்டு வந்த இவர்கள், பின்னர் பரிதாபங்கள் என்கிற பெயரில் சொந்தமாக யூடியூப் சேனல் ஆரம்பித்து அதில், விதவிதமான ஸ்பூஃப் வீடியோக்களை வெளியிட்டனர். இவர்கள் வெளியிடும் வீடியோக்களுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. இதனால் யூடியூபில் 30 லட்சத்துக்கும் மேல் சப்ஸ்கிரைபர்களும் இவர்களுக்கு உள்ளனர்.