
தமிழ் சினிமாவில் காமெடி சக்கரவர்த்தி கவுண்டமணியை மிஞ்ச யாரும் இல்லை என்று சொல்லும் அளவிற்கு கொடிகட்டி பறந்தார். சினிமாவில் நடிப்பதற்கு முன் நாடகங்களில் நடித்து வந்தார். அதன் பிறகு தான் 16 வயதினிலே படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அது காமெடி ரோல் அல்ல. இந்தப் படத்திற்கு முன்னதாகவே கவுண்டமணி சர்வர் சுந்தரம், ராமன் எத்தனை ராமனடி, தேனும் பாலும் ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். இந்தப் படத்தில் அவரது ரோல் பெரியளவில் இல்லை.
1980 ஆம் ஆண்டு முதல் சினிமாவில் வரும் வாய்ப்புகளை எல்லாம் பிடித்துக் கொண்டு தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களை சிரிக்க வைத்தார். சோலோவாகவே பாடி லாங்குவேஜ் வாய்ஸ் மாடுலேஷன் மூலமாக ரசிகர்களை சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்தார். சோலோவாக மட்டுமின்றி செந்தில் உடன் இணைந்து அண்ணன் தம்பி போல் தமிழ் சினிமாவில் இந்த ஜோடி கலக்கியது. அதிலேயும் கரகாட்டக்காரன் படத்தில் வரும் சொப்பன சுந்தரிய இப்போ யார் வச்சிருக்கா காமெடியாக இருந்தாலும் சரி, வாழைப்பழ காமெடியாக இருந்தாலும் சரி இன்றும் ரசிகர்கள் சிரிக்க தான் செய்வார்கள்.
செம்மயா ஃபேன்ஸ் உடன் Vibe பண்ணும் சவுண்டு – பிக் பாஸ் 8க்கு பிறகு சௌந்தர்யா குத்தாட்டம்!
ஒரு சில படங்களில் ஹீரோவாகவும், இன்னும் சில படங்களில் வில்லனாகவும் நடித்திருக்கிறார் கவுண்டமணி. ஒரு நாள் சம்பளமாக ரூ.10 லட்சம் வரை வாங்கியிருக்கிறார். அவ்வளவு சம்பளம் வாங்கிய ஒரே ஒரு காமெடி நடிகர் கவுண்டமணி மட்டும் தான். காமெடி இருந்தால் படம் ஹிட் என்று சொல்லும் அளவிற்கு அவரது காமெடி காட்சிகள் இருந்தது.
இந்நிலையில் நடிகரும் - இயக்குனருமான பாக்யராஜ் இவரை பற்றி கூறியுள்ள தகவல் வைரலாகி வருகிறது. கோயம்புத்தூர் உடுமலைப்பேட்டையைச் சேர்ந்தவர் தான் கவுண்டமணி. நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்த சுப்பிரமணியை கவுண்டமணியாக்கியதே பாக்கியராஜ் தான்.கவுண்டமணியும், பாக்யராஜூம் ஒரே ஊரைச் சேர்ந்தவர்கள். சினிமா வாய்ப்பு தேடி அலைந்த போது இருவரும் ஒரே அறையில் தான் தங்கியிருக்கிறார்கள். இந்த நிலையில் தான் பாரதிராஜாவின் பதினாறு வயதினிலே படத்தில் அவருக்கு வாய்ப்பு கொடுத்தார் பாக்கியராஜ். அந்தப் படத்தில் பத்த வச்சிட்டியே பரட்ட என்ற டயலாக் பேசுவார் கவுண்டமணி. இந்தப் படத்திற்கு பிறகு கிழக்கு போகும் ரயில் படத்தில் நடித்தார். இதில், ராதிகாவின் மாமா ரோலில் முதலில் டெல்லி கணேஷை நடிக்க திட்டமிட்டார் இயக்குநர் பாரதிராஜா.
இந்திரஜாவுக்கு குழந்தை பிறந்தாச்சு; தாத்தா ஆன சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும் ரோபோ ஷங்கர்!
ஆனால், அந்த ரோலில் கவுண்டமணி நடிக்க வேண்டும் என்று சொல்லி அவரை நடிக்க வைத்துவிட்டார் பாக்யராஜ். இதையடுத்து கவுண்டமணி பல படங்களில் நடித்தார். தமிழ் சினிமாவில் 40 ஆண்டுகாலம் தன்னுடைய காமெடி காட்சிகளால் கலக்கியிருக்கிறார். ஒரு நாள் என்னை இயக்கிய இயக்குநர்கள் என்ற தலைப்பில் கவுண்டமணி கட்டுரை எழுதினார்.
இதில் பாக்கியராஜ் பற்றி குறிப்பிடவே இல்லை. இதனால் வேதனை அடைந்த பாக்கியராஜ் ஒருநாள் டெல்லி கணேஷை சந்தித்த போது இதைப் பற்றி சொல்லியிருக்கிறார். அதாவது முதலில் கிழக்கே போகும் ரயில் படத்தில் ராதிகாவின் மாமா ரோலுக்கு பாரதிராஜா முதலில் உங்களது பெயரை தான் சொன்னார். ஆனால், நான் தான் கவுண்டமணி பெயரை பரிந்துரை செய்து நடிக்க வைத்தேன். அவருக்கு நன்றி கூட இல்லை என்று கூறியிருக்கிறார். இதனை டெல்லி கணேஷ் ஒரு பேட்டியில் பகிர்ந்து கொண்டிருக்கிறார். இந்த பழைய தகவல் இப்போது வைரலாகி வருகிறது.
சூப்பர் ஹிட் சீரியலில் இருந்து வெளியேறிய ஹீரோயின்; என்ன ஆச்சு?