தமிழ் சினிமாவில் 15 வருடங்களுக்கும் மேலாக பல முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்து வரும் காமெடி நடிகர் சாம்சின் மகன் தற்போது நடிகராக களமிறங்க உள்ள தகவலை அவரே சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
பல படங்களில் குணச்சித்திர வேடத்திலும் காமெடி வேடத்திலும் நடித்து தன்னுடைய வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி, ரசிகர்களை சிரிக்க வைத்து ஸ்கோர் செய்பவர் சாம்ஸ்.
இவரது தொடர்ந்து இவரது மகன் யோஹான் சினிமாவில் அறிமுகமாக உள்ளார் என்பதை சாம்ஸ் தன்னுடைய மகனின் புகைப்படத்தை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.
சினிமாவில் அறிமுகமாக வேண்டும் என்பதற்காகவே முறைப்படி கூத்துப்பட்டறையில் நடிப்பு பயிற்சியும் தனியார் திரைப்படக் கல்லூரியில் இயக்குனர் பயிற்சியையும் முடித்த யோஹான் அதன் பின்னர் இயக்குனர் ராம் அவர்களிடம் உதவி இயக்குநராகவும் பணியாற்றியுள்ளாராம்.
மேலும் தற்போது நடிகராக களம் இறங்க உள்ள தன்னுடைய மகன் யோகனுக்கு ரசிகர்கள் ஆதரவு கொடுக்க வேண்டும் என சாம்ஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதை தொடர்ந்து இவரது மகனுக்கு சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் பலர் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
அதே நேரத்தில், உங்களுக்கு இவ்வளவு பெரிய மகனா என்று ஆச்சர்யத்துடன் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.