அடுத்தடுத்த மரணங்களால் திணறும் திரையுலகம்... கொரோனாவின் கோரதாண்டவத்திற்கு பிரபல பாடலாசிரியர் பலி...!

First Published Jan 4, 2021, 1:53 PM IST

இதனிடையே கொரோனா தொற்றால் அடுத்தடுத்து திரையுலகில் பல்வேறு சாதனைகளை படைத்த திறமையான கலைஞர்கள் உயிரிழப்பது கவலையை ஏற்படுத்தியுள்ளது. 

தட்டுத்தடுமாறி திரையுலகம் இப்போது தான் சற்றே சுவாசிக்க ஆரம்பித்துள்ளது. கொரோனா லாக்டவுன், பொருளாதார வீழ்ச்சி, தியேட்டர்களில் பார்வையாளர்கள் குறைப்பு, ஓடிடி ரிலீஸ் என ஏகப்பட்ட தடைகளை கடந்து, தற்போது தான் பார்வையாளர்கள் தியேட்டர்களில் படம் பார்க்க ஆரம்பித்துள்ளனர். அதேபோல் டாப் ஸ்டார்கள் முதல் புதுமுகங்கள் வரை பரபரப்பாக படப்பிடிப்புகளில் பங்கேற்கவும் ஆரம்பித்துள்ளனர்.
undefined
இதனிடையே கொரோனா தொற்றால் அடுத்தடுத்து திரையுலகில் பல்வேறு சாதனைகளை படைத்த திறமையான கலைஞர்கள் உயிரிழப்பது கவலையை ஏற்படுத்தியுள்ளது.
undefined
பன்மொழி மக்களையும் தனது இனிய குரலால் கட்டிப்போட்ட எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, அதிலிருந்து மீண்டும் வந்த நிலையில், மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அந்த சோகம் இன்னும் ரசிகர்கள் மனதை விட்டு அகலாத நிலையில், தற்போது இசையுலகம் மற்றொரு மாபெரும் இழப்பை சந்தித்துள்ளது.
undefined
மலையாள திரையுலகில் புகழ் பெற்ற பாடலாசிரியராக வலம் வந்தவர் அனில் பனச்சூரன். வெளிப்பாடிண்டே என்ற படத்தில் இவர் எழுதிய என்டேம்மேடே “ஜிமிக்கி கம்மல்” பாடல் உலக அளவில் புகழ் பெற்றது.
undefined
கவிஞர், பாடகர், பாடலாசிரியர் என பன்முக திறமைக்கு சொந்தக்காரரான இவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று மாரடைப்பு ஏற்பட்டு காலமானார்.அவருக்கு வயது 55.
undefined
அரபிக் கதா என்ற படத்தில் இடம் பெற்ற பாடல்களால் பிரபலமானார். காடு என்ற திரைப்படத்தை இயக்க அவர் திட்டமிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
undefined
click me!