Anirudh and Kaviya Maran Wedding Reception Photos : அனிருத் மற்றும் காவியா மாறன் ஜோடியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் முதல்வர் விஜய், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் உள்பட ஏராளமான பிரபலங்கள் கலந்துகொண்டனர்.
CM Vijay Attend Anirudh and Kaviya Maran Wedding Reception
தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் அனிருத். அவர் சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறனின் மகள் காவியா மாறனை காதலித்து கரம்பிடித்தார். இவர்களது திருமணம் கிரீஸ் நாட்டில் கடந்த நவம்பர் 11ந் தேதி நடைபெற்றது. திருமணம் முடிந்த கையோடு சென்னைக்கு திரும்பிய இந்த புதுமண ஜோடி, அடுத்ததாக தங்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சியை சென்னையில் இன்று பிரம்மாண்டமாக நடத்தி உள்ளனர். இதில் தமிழக முதல்வர் விஜய், கலந்துகொண்டு, மணமக்களுக்கு பூங்கொத்து வழங்கி வாழ்த்தினார்.
212
முதல்வருடன் சூப்பர்ஸ்டார்
அனிருத் - காவியா மாறன் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்திருந்த தமிழக முதல்வர் விஜய்யை, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், கலாநிதி மாறன் மற்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் வரவேற்றனர். அப்போது அவர்கள் ஒன்றாக எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படம் இது.
312
பிரபலங்களின் சங்கமம்
அனிருத் - காவியா மாறன் திருமண வரவேற்பில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலகநாயகன் கமல்ஹாசன் ஆகியோர் எடுத்துக் கொண்ட குரூப் போட்டோ இது.
திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி புன்னகையோடு வந்து அனிருத் - காவியாவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
512
கேரள முதல்வர் பங்கேற்பு
கேரள முதலமைச்சர் சதீசன் மற்றும் கவிஞர் வைரமுத்து ஆகியோர் ஒன்றாக வந்து அனிருத் மற்றும் காவியா மாறன் ஜோடிக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
612
ஸ்டாலின் எண்ட்ரி
தன் மகளின் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வருகை தந்திருந்த முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின், அவரது மனைவி துர்கா ஸ்டாலின், அவரது மருமகன் சபரீசன் ஆகியோரை வரவேற்ற கலாநிதி மாறன்.
712
ஆண்டவரின் தரிசனம்
அனிருத் மற்றும் காவியா மாறன் ஜோடிக்கு கமல்ஹாசன் நேரில் வாழ்த்துக்களை தெரிவித்தார். தற்போது கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் சண்டியர் திரைப்படத்திற்கு அனிருத் தான் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
812
லாரன்ஸ் மாஸ்டர் வாழ்த்து
நடிகர், இயக்குநர், டான்ஸ் மாஸ்டர் என பன்முகத்திறமை கொண்ட லாரன்ஸ் மாஸ்டர் இந்த திருமண வரவேற்பில் கலந்துகொண்டு, புதுமணத் தம்பதிகளை வாழ்த்தினார்.
912
பிரபுவின் பாசம்
சிவாஜி கணேசனின் மகன் பிரபு தன்னுடைய மனைவி உடன் வந்து அனிருத் - காவியா மாறன் திருமண வரவேற்பில் கலந்துகொண்டார். அந்த அழகிய புகைப்படம் இது.
1012
நடிகர் சதீஷ் வாழ்த்து
நகைச்சுவை நடிகராக இருந்து தற்போது ஹீரோவாக உயர்ந்துள்ள சதீஷ், கோர்ட் சூப் போட்டு ஸ்டைலாக வந்து அனிருத் - காவியா ஜோடியை வாழ்த்தி உள்ளார்.
1112
அரசன் வந்தாச்சு
அனிருத் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு கலந்துகொண்டார். தற்போது தாணு தயாரிப்பில் உருவாகி வரும் அரசன் திரைப்படத்திற்கு அனிருத் தான் இசையமைக்கிறார். இப்படத்தை வெற்றிமாறன் இயக்க, சிம்பு ஹீரோவாக நடிக்கிறார்.
1212
முன்னாள் முதல்வர்கள் சந்திப்பு
அனிருத் - காவியா மாறன் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு வருகை தந்திருந்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ஆகியோருடன் ஜாலியாக கலந்துரையாடினார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.