Anirudh - Kaviya Maran Wedding Reception : அனிருத் - காவியா மாறன் ஜோடியை வாழ்த்த படையெடுத்து வந்த பிரபலங்கள்

Published : Nov 21, 2026, 07:29 PM IST

Anirudh and Kaviya Maran Wedding Reception Photos : அனிருத் மற்றும் காவியா மாறன் ஜோடியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெறும் நிலையில், அதில் கலந்துகொண்ட பிரபலங்களின் புகைப்படங்களை பார்க்கலாம்.

PREV
19
அனிருத் - காவியா மாறன் திருமண வரவேற்பு புகைப்படங்கள்

இசையமைப்பாளர் அனிருத், தயாரிப்பாளர் கலாநிதி மாறனின் மகள் காவியாவை காதலித்து வந்த நிலையில், அவர்கள் திருமணத்திற்கு இரு குடும்பத்தாரும் கிரீன் சிக்னல் காட்டினர். இதையடுத்து இவர்களது திருமணத்தை கிரீஸ் நாட்டில் கடந்த நவம்பர் 11ந் தேதி குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் நடத்தி முடித்தனர். இதையடுத்து இவர்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சி இன்று சென்னையில் உள்ள ஐடிசி சோழா ஹோட்டலில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் ஏராளமான திரையுலக மற்றும் அரசியல் பிரபலங்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். அந்த புகைப்படத் தொகுப்பை பார்க்கலாம்.

29
திமுக எம்.எல்.ஏ தங்கம் தென்னரசு

திமுக சட்டமன்ற உறுப்பினர் தங்கம் தென்னரசு தன்னுடைய குடும்பத்துடன் வந்து அனிருத் மற்றும் காவியா மாறன் ஜோடியை வாழ்த்தினார். புதுமணத் தம்பதிகளோடு அவர் எடுத்துக் கொண்ட அழகிய புகைப்படம் இது.

39
கே.கே.எஸ்.எஸ்.ஆர் வாழ்த்து

திமுக எம்.எல்.ஏ-வும் முன்னாள் அமைச்சருமான கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், அனிருத் மற்றும் காவியா மாறன் ஜோடியை வாழ்த்தி அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

49
ராதிகா ஃபேமிலி

தமிழ் திரையுலகில் பிசியான நடிகையாக வலம் வரும் ராதிகா சரத்குமார் தன்னுடைய மகனுடன் வந்து இந்த திருமண வரவேற்பு நிகழ்வில் கலந்துகொண்டார். அவர்கள் பொண்ணு - மாப்பிள்ளையோடு எடுத்துக்கொண்ட அழகிய போட்டோ இது.

59
சூப்பர்ஸ்டார் மகள்

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் இளைய மகள் செளந்தர்யா தன்னுடைய கணவர் விஷாகன் மற்றும் மகன்களோடு வந்து இந்த திருமண வரவேற்பு விழாவில் கலந்துகொண்டார்.

69
வாழ்த்திய திமுகவினர்

திமுகவின் மூத்த நிர்வாகியான துரைமுருகன் மற்றும் ஆர்.எஸ்.பாரதி ஆகியோருடன் எம்.பி டி.ஆர்.பாலுவும் வந்து அனிருத் - காவியா மாறன் ஜோடியை மனதார வாழ்த்தினார்.

79
ஃபேமிலி க்ளிக்

அனிருத் மற்றும் காவியா மாறன் ஜோடி இருவரும் தங்களது பெற்றோருடன் இணைந்து ஃபேமிலி போட்டோ எடுத்துள்ளனர். இதில் அனிருத்துடன் அவரது தாய் மற்றும் தந்தை நிற்க, மறுபுறம் காவியா உடன் அவரது அப்பா கலாநிதி மற்றும் அம்மா காவேரி நிற்கின்றனர்.

89
கிரிக்கெட் வீரர் புவனேஸ்வர் குமார்

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளரும், முன்னாள் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி வீரருமான புவனேஸ்வர் குமார், அனிருத் - காவியா ஜோடியை வாழ்த்திய அழகிய தருணம்.

99
கே.என்.நேரு, எ.வ.வேலு, ஆ ராசா வாழ்த்து

திமுக எம்.பி ஆ.ராசா மற்றும் எம்.எல்.ஏ.க்கள் எ.வ.வேலு, கே.என்.நேரு ஆகியோர் ஒன்றாக வந்து மணமக்களை வாழ்த்தினர். அப்போது எடுக்கப்பட்ட அழகிய போட்டோ தான் இது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories