மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லம் இன்று நினைவு இல்லமாக மாற்றப்பட்டுள்ளது.
நினைவு இல்லமாக மாற்றப்பட்ட போதும் பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது என்றும், முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள், அதிகாரிகள் ஆகியோர் மட்டுமே வேதா இல்லத்திற்குள் செல்ல வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவு பிறப்பித்திருந்தது. தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை அதனை திறந்து வைத்தார்.
இதையடுத்து காமராஜர் சாலையில் உள்ள தமிழக உயர்கல்வி மன்ற வளாகத்தில் வெண்கலத்தால் வடிவமைக்கப்பட்ட 9 அடி முழு உருவ ஜெயலலிதா சிலையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார். உடன் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
காமராஜர் சாலையில் உள்ள தமிழக உயர்கல்வி மன்ற வளாகத்திற்கு இன்று முதல் ஜெயலலிதா வளாகம் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இன்றைய நிகழ்வுகள் அதிமுக தொண்டர்களை கடந்து அஜித் ரசிகர்களையும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
அதற்கு காரணம் ஜெயலலிதா சிலை திறப்பில் தல அஜித்தின் பங்களிப்பும் கலந்துள்ளது தான். ஆம்... ஜெயலலிதா சிலை திறப்பில் நடிகர் அஜித் உதவியுடன் வடிவமைக்கப்பட்ட ட்ரோன் பயன்படுத்தப்பட்டுள்ளது.
ஜெயலலிதா சிலை மீது போர்த்தப்பட்டிருந்த பச்சை நிற போர்வையை ட்ரோன் மூலமாக அகற்றி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார்.
அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுடன் இணைந்து அஜித் வடிவமைத்த ட்ரோன் மூலமாக ஜெயலலிதா சிலை மீது மலரும் தூவப்பட்டது