சர்ச்சை என்ற பெயருக்கு இன்னொரு அர்த்தமாக வலம் வருகிறார் மீரா மிதுன். இப்போது மட்டுமல்ல பிக்பாஸ் வீட்டில் காலடி எடுத்த வைத்த நாளில் இருந்தே மீரா மிதுன் மீது சர்ச்சைக்கு பஞ்சமில்லை.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றால் புகழும் பட வாய்ப்புகளும் கிடைக்கும் என நினைத்த மீரா மிதுனுக்கு கிடைத்தது என்னவே பொல்லாப்பு தான். தேவையில்லாமல் சேரன் மீது வீண் பழியை தூக்கிப்போட்டு, தமிழக ரசிகர்களிடம் வாங்கிக்கட்டிக்கொண்டார்.
மீரா மிதுனுக்கு சர்ச்சை தான் கைவந்த கலை ஆகிற்றே. அதனால் அதை கையில் எடுத்தார். ரஜினி, கமல், விஜய், சூர்யா என தமிழ் சினிமாவின் டாப் ஹீரோக்கள் மற்றும் ஹீரோயின்களை பற்றி வாய்க்கு வந்த படி மோசமாக பேசி வீடியோ வெளியிட்டார்.
ஓவராக விமர்சித்து பல வழக்குகளை வாங்கி விட்டதால் சற்றே அமைதியான மீரா மிதுன், மீண்டும் தனது கவர்ச்சி ரூட்டிற்கே திரும்பிவிட்டார்.
ஸ்ட்ராப்லெஸ் பிளவுஸுடன் பார்க்கவே கண்கூசும் அளவிற்கு கவர்ச்சி போஸ் கொடுத்து ரணகளப்படுத்தியுள்ளார் மீரா மிதுன்.
கவர்ச்சி ரூட்டிற்கு கம்பேக் கொடுக்கும் விதமாக உச்சகட்ட போஸ் கொடுத்துள்ள மீரா மிதுனின் போட்டோஸ் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.