ராதிகா - சரத்குமார் தம்பதியின் மகள் ரயன் கடந்த 2016 ஆம் ஆண்டு பெங்களூருவை சேர்ந்த, இந்திய கிரிக்கெட் வீரர், அபிமன்யு மிதுனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இந்த தம்பதிகளுக்கு, ஏற்கனவே தாரக் என்கிற ஆண் குழந்தை இருக்கும் நிலையில், இரண்டாவது முறையாக கர்ப்பமான ரயனுக்கு கடந்த ஆண்டு அழகிய குழந்தை பிறந்தது.
அந்த குழந்தைக்கு அம்மாவின் நினைவாக ராத்யா என பெயரிட்டுள்ளார். சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக வலம் வரும் ரயன், தன்னுடைய குடும்ப புகைப்படங்களையும், மகன், மகள், அப்பா, அம்மா சம்பந்தப்பட்ட போட்டோக்களையும் பதிவிட்டு வருகிறார்.

16 கிலோ வரை உடல் எடையைக் குறைத்துள்ள ரயன் கொழு கொழுவென குண்டாக இருந்த போட்டோவையும், கறுப்பு கலர் மார்டன் உடையில் ஸ்லிம்மாக இருக்கும் போட்டோவையும் பதிவிட்டு கெத்து காட்டியுள்ளார்.