தங்கலான் படத்தின் ஷூட்டிங் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தீபாவளியன்று இப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி பலரையும் ஆச்சர்யப்படுத்தியது. இந்நிலையில், தங்கலான் படத்துக்காக நடிகர் சீயான் விக்ரம், வித்தியாசமான கெட் அப்பில் இருக்கும் புகைப்படங்கள் சிலவற்றை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.