கோப்ரா படத்துக்கு போகணும் லீவு கொடுங்க சார்.. கல்லூரி முதல்வருக்கு லெட்டர் எழுதி அலப்பறை செய்த விக்ரம் ஃபேன்ஸ்

First Published | Aug 30, 2022, 1:58 PM IST

Cobra movie : நாளை ரிலீசாக உள்ள கோப்ரா படத்துக்கு முதல் நாள் டிக்கெட் கிடைக்காததால், தங்களுக்கு 1-ந் தேதி விடுமுறை அளிக்குமாறு கல்லூரி மாணவர்கள் எழுதியுள்ள கடிதம் வைரலாகி வருகிறது.

சியான் விக்ரம் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள படம் கோப்ரா. 3 ஆண்டுகளுக்கு மேலாக தயாராகி வந்த இப்படம் நாளை உலகமெங்கும் ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தில் நடிகர் விக்ரமுக்கு ஜோடியாக கன்னட நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார். மேலும் மிருணாளினி, இர்பான் பதான், ரோஷன் ஆண்ட்ரூஸ், மீனாட்சி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

கோப்ரா திரைப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். அவரது இசையில் இதுவரை வெளியான பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் ஆனதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்த வண்ணம் உள்ளது. இப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது.

இதையும் படியுங்கள்... இதை மட்டும் செய்யவே மாட்டேன்! இந்த காரணத்தால் திரையுலகை விட்டு விலக தயாரான நயன்? விக்கி மீது அவ்வளவு காதலா!

Tap to resize

நடிகர் விக்ரம் பல்வேறு கெட் அப்களில் நடித்துள்ளதால், இப்படத்தை காண ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். அதுமட்டுமின்றி இப்படத்தின் புரமோஷன் பணிகளும் வித்தியாசமாக நடத்தப்பட்டது. குறிப்பாக தமிழகத்தில் உள்ள சென்னை, மதுரை, திருச்சி, கோவை உள்ளிட்ட மாநகரங்களுக்கு சென்ற படக்குழு, அங்குள்ள கல்லூரிகளில் புரமோட் செய்தனர். இதனால் கல்லூரி மாணவர்களிடையே இப்படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது.

அதன் எதிரொலியாக திருச்சியில் உள்ள செயிண்ட் ஜோசப் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள், நாளை ரிலீசாக உள்ள கோப்ரா படத்துக்கு முதல் நாள் டிக்கெட் கிடைக்காததால், தாங்கள் 1-ந் தேதி படத்தை பார்க்க உள்ளதாகவும், இதனால் அன்றைய தினம் தங்களுக்கு விடுமுறை வேண்டும் என குறிப்பிட்டு அக்கல்லூரி முதல்வருக்கு கடிதம் ஒன்றை எழுதி உள்ளனர். அன்றைய தினம் தாங்கள் கல்லூரிக்கு வராவிட்டால், தங்களது பெற்றோருக்கு போன் செய்துவிட வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இந்த கடிதம் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.

இதையும் படியுங்கள்... என்னது ‘தி லெஜண்ட்’ படம் 45 கோடி லாபமா...! அதிகாரப்பூர்வ வசூலை வெளியிட்ட அண்ணாச்சி... ஆடிப்போன ரசிகர்கள்

Latest Videos

click me!