நடிகை நயன்தாரா, கணவர் விக்னேஷ் சிவன் மீது உள்ள காதல் காரணமாகவும்... அவரது குடும்ப வழக்கத்தையும், கலாச்சாரத்தையும், மதித்து இந்த ஒரு விஷயத்திற்காக சினிமாவை விட்டே விலக முடிவு செய்துள்ளதாக வெளியாகி உள்ள தகவல், தற்போது சமூக வலைதளத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
நடிகை நயன்தாரா சினிமாவில் நடிக்க துவங்கிய காலத்தில், சில காதல் கிசுகிசுக்களில் சிக்கியது மட்டும் இன்றி காதல் தோல்வியலையும் சந்தித்தவர். பின்னர் விக்னேஷ் சிவனை காதலிக்க துவங்கினார். இவரது இந்த காதலும் முதலில் சில விமர்சனங்களை சந்தித்த போதிலும், விடாப்பிடியாக இருவரும் சுமார் ஏழு ஆண்டுகள் உருகி உருகி காதலித்து, சமீபத்தில் பெற்றோர் சம்மதத்துடன் திருமண பந்தத்திலும் இணைந்தனர்.
அழகிய காதல் ஜோடியாக மட்டுமில்லாமல், ஒருவரை ஒருவர் புரிந்து கொண்ட அன்னோனியமான நட்சத்திர ஜோடியாக வலம் வரும் நயன்தாரா விக்னேஷ் சிவன் இருவரும், திருமணத்திற்கு பிறகும் தங்களுடைய வேலைகளில் கவனம் செலுத்தி வந்தாலும், அவ்வபோது வெளிநாடுகளுக்கு சென்று மிகவும் சுதந்திரமாக தங்களுடைய காதலை வெளிப்படுத்தி அதன் புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளனர்.
அந்த வகையில் தற்போது இரண்டாவது முறையாக நயன்தாரா- விக்னேஷ் சிவன் நட்சத்திர ஜோடி, ஸ்பெயின் நாட்டிற்கு சென்றுள்ள நிலையில்... சுமார் பத்து நாட்களுக்கு மேலாக அங்கு உள்ள பல்வேறு இடங்களுக்கு சென்று தங்களுடைய இரண்டாவது ஹனிமூனை என்ஜாய் செய்து வருகின்றனர். அவ்வபோது விக்னேஷ் சிவன் இது குறித்த புகைப்படங்களை வெளியிட்டு ஸ்பெயின் நாட்டின் அழகையும் தங்களுடைய காதலின் ஆழத்தையும் வெளிப்படுத்தி வருகிறார்.
ஜோடியாக ரொமான்டிக் புகைப்படங்கள் எடுத்துக் கொள்வது மட்டுமின்றி, நயன்தாரா சோலோவாகவும் வித விதமான புகைப்படங்களை எடுத்து வெளியிட அதுவும் ரசிகர்கள் மத்தியில் மிகவும் வைரலாகி வருகிறது. தற்போது இவர்கள், ஐபிஸா என்னும் தீவிற்கு விசிட் அடித்துள்ளனர். இது குறித்த புகைப்படங்களையும் இந்த ஜோடி வெளியிட்டு வருகின்றனர். ஹனி மூனுக்காகவே பல லட்சங்களை செலவு செய்து வரும் நயன்தாரா தன்னுடைய காதல் கணவர் விக்னேஷ் சிவனுக்காக சினிமாவை விட்டு விலக முடிவு செய்துள்ளதாக வெளியாகியுள்ள தான் தற்போது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
நடிகை நயன்தாரா திருமணம் ஆனது முதலே, தன்னுடைய கழுத்தில் உள்ள தாலியை எக்காரணத்திற்காகவும் கழட்டி வைக்கவில்லை. மாடர்ன் டிரஸ் மற்றும் ட்ரெடிஷனல் டிரஸ் என எது அணிந்திருந்தாலும் தன்னுடைய தாலியை மறைக்காமல் போஸ் கொடுத்து கலக்கி வருகிறார். தன்னுடைய குடும்பத்தினரின் அறிவுறுத்தலின் பெயரில் தாலியை மட்டும் எக்காரணத்திற்காகவும் கழட்டி விடக்கூடாது என்பதில் நயன்தாரா மிகவும் உறுதியாக உள்ளாராம். எனவே இதற்காக சினிமாவை விட்டு விலகவும் தயாராக உள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரத்தில் இருந்து செய்திகள் வெளியாகி உள்ளது.
கணவர் விக்னேஷ் சிவன் மீது கொண்ட அதீத காதலும், குடும்பத்தினர் மீது வைத்துள்ள அன்பு தான் இவரது இந்த முடிவுக்கு காரணம் என கூறப்படுகிறது. பெரும்பாலான நடிகைகள் திருமணம் ஆன பின்னர் நடிக்க வந்துவிட்டால், தங்களுடைய தாலியை கூட கழட்டி வைத்துவிட்டு நடித்து வரும் நிலையில், முன்னணி நடிகையாக இருந்தும் நயன்தாரா இப்படி ஒரு முடிவு எடுத்துள்ளது பலரையும் ஆச்சர்யத்தில் மூழ்கடித்துள்ளது.
தற்போது தன்னுடைய கைவசம் உள்ள படங்களில் கூட தாலியை கழட்டாமல் நடிக்க முடிவு செய்துள்ளதாகவும், கமிட் ஆன படங்களை நடித்து முடித்து விட்ட பின்னர் நயன்தாரா இந்த ஒரே ஒரு காரணத்திற்காக திரையுலகை விட்டே விலகி விட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. திரைப்படங்களை நடிக்க வில்லை என்றாலும், பட தயாரிப்பு மற்றும் கைவசம் உள்ள சில தொழில்களை செய்ய முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இது குறித்த எந்த ஒரு அதிகார பூர்வ தகவலும் வெளியாகவில்லை.