இந்த ஆண்டு மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றான கோப்ரா நேற்று திரைக்கு வந்தது. தமிழ் மொழி ஆக்சன் திருவிழா இந்த படத்தை டிமான்டி காலனி மற்றும் இமைக்கா நொடிகள் படங்களை இயக்கிய ஆர் அஜய் ஞானமுத்து எழுதியுள்ளார். தற்போது படத்தின் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது அதன்படி முதல் நாளில் கோப்ரா, தமிழகத்தில் மட்டும் 16.5 கோடிகளை பெற்றுள்ளது. அதேபோல மலேசியாவில் 13.8 கோடிகளையும், கேரளாவில் ரூ.1.5 கோடியும், ஆந்திராவில் ரூ.40 லட்சத்தையும் வசூலாக பெற்றுள்ளதாம்..
24
கடந்த 2019 ஆம் ஆண்டு படப்பிடிப்பை அறிவிக்கப்பட்ட இந்த படம் கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் காத்திருப்பிற்குப் பிறகு வெளியாகியுள்ளது. முன்னதாக மஹான் படம் கலையான விமர்சனங்களை மட்டுமே பெற்றது. அதோடு ஓடிடியில் வெளியாகியுள்ளது. இதனால் பெரிய திரையில் சீயானை காண ரசிகர்கள் காத்திருந்தனர். ஏ ஆர் ரகுமான் இசையமைப்பில் உருவான பாடல்கள் பிரமாண்ட விழாவின் மூலம் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றது.
மதி என்கிற கணித மேதையாக வரும் விக்ரம் கிட்டத்தட்ட ஏழு வேடங்களில் விக்ரம் நடித்துள்ளார். விக்ரமைத் தவிர இந்த படத்தில் கே ஜி எஃப் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி இந்த படத்தில் நடித்ததன் மூலம் கோலிவுட்டில் அறிமுகமாகியுள்ளார். இவர்களுடன் முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான், மியா ஜார்ஜ், ரோஷன் மேத்யூ, சர்ஜனோ காலித், பத்மப்ரியா ஜானகிராமன், கனிஹா, மிர்னாலினி ரவி, மீனாட்சி கோவிந்தராஜன் மற்றும் கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். எஸ்.எஸ்.லலித் குமார் தயாரித்துள்ளார்.
கோப்ரா படத்தை அடுத்து தற்போது மணிரத்தினத்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பிரம்மாண்டமான பொன்னியின் செல்வனில் விக்ரம் நடித்து முடித்துள்ளார். இந்த படம் வரும் செப்டம்பர் 30ஆம் தேதி நாடு முழுவதும் வெளியாக உள்ளது. இந்த படத்தில் ஜெயம் ரவி, கார்த்தி, பிரபு, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் தோன்றியுள்ளனர்.