தெலுங்கு சினிமாவில் இளம் நடிகையாக வலம் வந்துகொண்டிருந்த நிஹாரிகா, தமிழில் கூட விஜய் சேதுபதி உடன் “ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்” படத்தில் நடித்து கெளதம் கார்த்திக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
இவரின் திருமணத்தில், மெகா ஸ்டார் சிரஞ்சீவி, பவர் ஸ்டார் பவன் கல்யாண், அல்லு அர்ஜுன், ராம் சரண், வருண் தேஜ் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். குறிப்பாக சிரஞ்சீவி தன்னுடைய தம்பி மகளுக்கு 2 கோடி மதிப்புள்ள நகைகளை பரிசளித்தது பலரையும் ஆச்சர்யத்தில் மூழ்கடித்தது.
இந்நிலையில், நிகாரிகா அவரின் கணவர் சைதன்யாவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அன் ஃபாலோ செய்துள்ளார். அதே போல், சைதன்யாவும் தன்னுடைய மனைவி நிஹாரிகாவை அன் ஃபாலோ செய்துள்ளார். எனவே, இவர்கள் இருவரும் பிரிய உள்ளதாக டோலிவுட் திரையுலகில் ஒரு தகவல் வட்டமிட்டு வருகிறது.
நிஹாரிகாவின் கணவர் சைதன்யா ஜொன்னலகெடா ஒரு தொழில்நுட்ப வல்லுநர், ஹைதராபாத்தில் பிறந்து வளர்ந்த இவர், தற்போது ஐதராபாத்தில் பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் பிஸினெஸ் ஆலோசகராக பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.