பியானோ வாசிப்பதில் கில்லாடி.. ஆனா பாடுவதில்? - சின்னக் கலைவாணர் விவேக் ஏன் சினிமாவில் அதிகம் பாடியதில்லை?

Published : Feb 20, 2026, 08:19 PM IST

Vivek secrets and List Of Songs in Tamil Cinema: நகைச்சுவை நடிகர்களில் ஒருவரான விவேக் அனைத்து துறைகளிலும் தனக்கென தனி இடத்தை ரசிகர்களின் மனதில் விதைத்துள்ளார். இவர் இதுவரையிலும் பாடல்கள் எதுவும் பாடவில்லை இதனைப் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

PREV
16
சின்னக் கலைவாணர் விவேக் ரகசியங்கள்

Vivek secrets and List Of Songs in Tamil Cinema: தமிழ் சினிமா: விவேக் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு அடையாளத்தினை கொண்ட நடிகர் ஆவார். இவரது கதாபாத்திரத்தில் நகைச்சுவை உடன் சில தேசப்பற்று மற்றும் சமூக நலனை கருதி நல்ல கருத்துகளையும் கூறி மக்கள் மத்தியில் பிரபலமானவர். இவரை தமிழ் சினிமாவில் சின்னக்கலைவாணர் என்று அழைத்துள்ளனர். அதேபோன்று சுற்றுச்சூழல், புவி வெப்பமயமாதல் போன்ற விஷயங்கள் பற்றி அடிக்கடி தன்னுடைய ட்விட்டர் மற்றும் அவர் நடிக்கும் படத்தில் மூலமும் பதிவிட்டு ரசிகர்களுக்கு தெரிவித்தார்.

26
தமிழ் காமெடி நடிகர்கள் பாடிய பாடல்கள்

விவேக்கின் நகைச்சுவை, வெறும் சிரிப்புக்காக மட்டுமல்லாமல், பல குணச்சித்திரங்கள் கதாபாத்திரங்களிலும் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளார். மீசையை முறுக்கு: மீசையை முறுக்கு படத்தில் இவர் தனது வாழ்க்கையில் நடந்த கதையை கூறியுள்ளார். இவர் ஹிப்பாப் ஆதிக்கு தந்தையாக நடித்திருப்பார். இளம் வயதில் பட்ட கஷ்டங்களை மகனுக்கு எடுத்துரைக்கும் வகையில் மிக அழகாக இந்த காலத்து இளைஞர்களுக்கு ஏற்ற வகையில் கூறியிருப்பார். அவர் தன் மகனுக்கு சொல்லிக் கொடுப்பது போல் எந்த கஷ்டம் வந்தாலும் மீசையை முறுக்கு என்று சொல்லும் வசனம் மாஸாக இருக்கும்.

36
சிறு சிறு பாட்டுக்கள்:

தமிழ் சினிமாவில் மூடநம்பிக்கைகளை ஒழிப்பதற்காக இவர் அவ்வபோது ஏற்கனவே பாடிய பாடல்களில் இவரது வசனங்களை போட்டு பாடலை உருவாக்கி அதனை அவர் நடிக்கும் படத்தில் பாடியிருப்பார். காமெடி கலந்த பாடலாகவும் பாடியிருப்பார். எடுத்துக்காட்டாக: பாட்டிக்கு ஒமகசியா ஓகியாக ஓகியாக என்னும் பாடலை கற்றுக் கொடுப்பார் அப்படி கற்றுக் கொடுப்பார் அந்த பாட்டி பாடி கொண்டிருக்கும் பொழுதே இறந்து விடுவார். அதுபோன்று பல பாடல்களை அவர் பாடி தமிழ் ரசிகர்களை சிரிக்க வைத்துள்ளார்.

46
விவேக் பியானோ வாசிப்பு

மற்றொரு பாடல்: ஜெய்ஹிந்த் என்னும் ஏ ஆர் ரகுமானின் பாடலுக்கு விவேக் காமெடி கலந்த கதையை அந்த பாட்டில் எழுதி ரசிகர்களை சிரிக்க வைத்துள்ளார். காக்கா ஒன்னு வடையை தூக்கிட்டு போயிருச்சு இன்னும் கதையை இந்த பாட்டில் எழுதி பாடியிருப்பார் அது மிகவும் ஹிட் அடித்தது.

விவேக் பாடியதால் ஹிட் அடித்த ஒரிஜினல் பாடல்: இவர் ஒரு பாட்டில் எடுத்து அதில் வரிகளை மாற்றி தனக்கேற்ற வரிகளாக பாடும் பொழுது அதனுடைய ஒரிஜினல் பாடல் மிகவும் ஹிட் அடித்தது. இது ஒரு பாடிய பிறகு இப்படி ஒரு பாடல் இருக்கு என்று அனைவருக்கும் தெரிய வந்தது. இப்படியெல்லாம் ஒரு பாடலை மாற்றிப் பாடலாமா என்று ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது.

56
படத்திற்கு பாடல்கள் பாடாத விவேக்:

தமிழ் சினிமாவில் ஹீரோக்கள் மற்றும் காமெடி நடிகர்கள் கூட அவர்கள் நடிக்கும் படத்திற்கு பாடல்கள் பாடியிருக்கின்றார்கள். எடுத்துக்காட்டாக நடிகர்வடிவேலு எட்டணா என்றாலும் 8 ஊரு எம்பாட்ட கேட்கும் என்னும் பாடலை நடிகர் வடிவேலு பாடியிருக்கிறார் அது மட்டுமல்ல இன்னும் சில பாடல்களை அவர் பாடி இருக்கிறார். நடிகர் பரோட்டா சூரி, வருத்தப்படாத வாலிபர் சங்கத்தில் ஒரு பாடல் ஒன்று பாடியிருக்கிறார்.

66
காமெடி நடிகர் விவேக் பாடல்கள்

ஆனால் விவேக் இதுவரையில் பாடல்கள் எதுவும் பாடியதில்லை. விவேக்கிற்கு பாடல்கள் பாட வாய்ப்பு. அளிக்கவில்லை. அதற்கான வாய்ப்புகளும் கிடைக்கவில்லை என்றே கூறலாம். ரசிகர் மத்தியில் சற்று மனம் வருத்தம் அளிக்கிறது. அவர் குரலில் இதுவரை நாம் எந்த பாடலையும் கேட்டதே இல்லை இனிமேலும் கேட்க முடியாது என்பது தமிழ் சினிமா உலகிற்கும், விவேக்கின் ரசிகர்களுக்கும் வருத்தம் அளிக்கிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories