ஒரே நேரத்தில் இரண்டு கடத்தல்! கயல் மற்றும் ஆதிரை குடும்பத்திற்கு வந்த சோதனை! Kayal Marumagal மகா சங்கமத்தில் அரங்கேறும் பயங்கர சதி!

Published : Feb 20, 2026, 07:26 PM IST

Anandhi and Rohini Kidnapped in Kayal and Marumagal Mahasangamam : கயல் மற்றும் மருமகள் மகா சங்கமத்தில் ஆனந்தி மற்றும் ரோகிணி கடத்தப்பட்ட நிலையில் இன்றைய எபிசோடில் என்ன நடக்கிறது என்பது பற்றி பார்க்கலாம்.

PREV
15
கயில் மற்றும் மருமகள்

கயில் மற்றும் மருமகள் இணைந்து நடக்கும் மகா சங்கமத்தில் இன்றைய எபிசோட்டில் மீனாட்சியின் பிறந்தநாள் விழா ஆட்டம் பாட்டத்துடன் ஆரம்பிக்கிறது அப்பொழுது ஆனந்தியை கடத்த பாலுவின் நண்பர்கள் வருகின்றனர். அவர்களை பார்த்துக் கொண்டிருந்த எழில் அவர்களை காப்பாற்றுவதற்கு செல்லும்பொழுது அண்ணாச்சி அவரை தடுத்து நிறுத்துகிறார். அவருடன் எழில் பேசி பேசிக் கொண்டிருக்கிறார்.அதன் பிறகு ஆனந்தி மீனாட்சி அம்மாவை பார்ப்பதற்கு சென்றார்.

25
ஆனந்தியை கடத்தும் பாலுவின் நண்பர்கள்:

ஆனந்தியின் பின்னாடியே சென்று பாலுவின் நண்பர்கள் ஆனந்தியை அழைத்து உங்களிடம் ஒரு விஷயம் தனியாக பேச வேண்டும் என்று கூப்பிட்டு சிறு வாக்குவாதம் செய்து கர்சிப்பில் இருக்கும் மயக்க மருந்தை வைத்து மூக்கில் அமுத்தி மயக்கமடைய வைத்து ஆனந்தியை ஒரு கோணி பையில் வைத்து மூட்டை கட்டி தூக்குகின்றனர்.

ரோகினியை கடத்தும் கௌதம்: சத்யாவின் உதவியுடன் கௌதம் சத்யாவை வெளியே வரவழைத்து அவருடன் சிறு பிரச்சனை செய்து அன்பு வலைகளை வீசி, மயக்க மருந்தினை மூக்கில் வைத்து ரோகினியை ஒரு பைக்குள் வைத்து மூட்டை கட்டி தூக்கி செல்கின்றனர்.

35
எதிர்பாராமல் வரும் போலீஸ்:

ரோகினியை கடத்தி வரும் கௌதம் அங்கு இருக்கும் போலீஸை பார்த்து விடுகிறார். இப்போ இந்த மூட்டையை தூக்கிட்டு போனா கண்டிப்பா போலீஸ் என்ன இருக்குன்னு நம்மள கேப்பாங்க .அதனால நம்ம கொஞ்ச நேரம் கழிச்சு போவோம் என்று இந்த மூட்டையை அங்கு பின்புறம் வை என்று தன் நண்பரிடம் சொல்ல அந்தக் கோணி மூட்டையை செடிக்கு மறைவாக வைக்க சொல்கிறார். அவர்கள் நண்பர்கள் அந்த மூட்டையை செடிக்கு மறைவாக வைத்து விட்டனர். வைத்துவிட்டு மறைந்து கொள்கின்றனர்.

ஆனந்தியே கடத்து வரும் பாலுவின் நண்பர்கள்: ஆனந்தியை கடத்தி வரும் பொழுது பாலு நண்பர்கள் அங்கிருக்கும் போலீசை பார்த்து பயப்படுகின்றனர் . இந்த மூட்டையை மறைத்து வைக்க வேண்டும் என்று நினைத்து சமையல்காரன் மூட்டியை ஏற்றிக் கொண்டிருக்கும் அந்த வண்டியின் அருகாமையில் வைத்து விடுகிறார்கள் பாலுவின் நண்பர்கள்.

45
பிரபுவிற்கும் எழிலுக்கும் நடக்கும் வாக்குவாதம்:

அண்ணாச்சி எழிலை பிடிவாதமாக சண்டையிட்டுக் கொண்டிருக்கும் பொழுது எழில் அடித்துக் கொண்டிருந்தார் அப்பொழுது அவருக்கு உதவி செய்யும் விதமாக பிரபு அங்கு வந்து அவரை தள்ளிவிட்டார். அவர் மயக்கம் அடைந்து கீழே விழுகிறார் அதனை கண்டு பிரபு நீ தான் கொலை பண்ணிட்ட எழில் என்று எழில் மீது பழி சுமத்துகிறார் அது அவர்களுக்கிடையே சிறிய மோதலாக உருவாகிறது ஒருவருக்கொருவர் சட்டையை மாத்தி மாத்தி பிடித்துக் கொண்டு சண்டை இடுகின்றனர்.

55
Anandhi and Rohini Kidnapped

ரோகினியை தேடும் ஆதிரை, ஆனந்தியை தேடும் கயல்: ஆனந்தியை நிச்சயதார்த்தத்திற்காக தேடும் கயல் ரோகினியை காணவில்லை என்று தேடும் ஆதிரை இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைந்தது.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories