பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் சரவணனும் அஞ்சலியும் கோவிலில் ஜோடியாக அமர்ந்திருப்பதை பார்த்துவிடுகிறார் மீனா. இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் இன்றைய எபிசோடில், மீனாவும் செந்திலும் பேசிக் கொண்டிருக்கும் போது, தங்கமயில் ஒரு வாய்ஸ் மெசேஜ் அனுப்பிவிடுகிறார். இதை செந்தில் கேட்டுவிடுகிறார். அப்போ நீ இன்னும் அந்த தங்கமயிலோடு காண்டாக்டில் தான் இருக்கியா என மீனாவை திட்டுகிறார். தனக்கு வேலை வாங்கித் தருமாறு கேட்டு தான் வாய்ஸ் மெசேஜ் அனுப்பி இருக்கிறார் தங்கமயில், இதைக்கேட்ட செந்தில், நீ மட்டும் அவளுக்கு வேலை வாங்கிக் கொடுத்தேனா நான் எல்லாத்தையும் என்னோட அப்பாகிட்ட சொல்லிவிடுவேன். நானும் உன்கிட்ட பேசமாட்டேன் என சொல்கிறார்.
25
கதிர் - ராஜி ரொமான்ஸ்
இதையடுத்து கதிர் - ராஜியை காட்டுகிறார்கள். இந்த சீரியலில் நிம்மதியாகவும், ஜாலியாகவும் இருக்கும் ஜோடி என்றால் அது இவர்கள் தான். சென்னைக்கு போயிட்டு வந்ததில் இருந்து இருவரும் எப்போதும் ரொமாண்டிக் மூடில் தான் இருக்கிறார்கள். கிளாசுக்கு கிளம்பும் ராஜி எப்பவும் போல ஜடையை பிண்ணிட்டு போகலாம் என தயாராகிறார். ஆனால் அவரை தடுத்து நிறுத்தும் கதிர், நீ இப்படியே லூஸ் ஹேர் ஸ்டைல்லையே போ, அதுதான் உனக்கு நல்லா இருக்குனு சொல்கிறார். ராஜியும் லூஸ் ஹேரில் கிளாசுக்கு கிளம்பி ரூமை விட்டு வெளியே வருகிறார்.
35
கோமதியை கண்டுகொள்ளாத பாண்டியன்
ராஜியை தலைவிரிகோலத்தில் பார்த்ததும் கடுப்பாகும் கோமதி, அவரைத் திட்டுகிறார். அதன்பின்னர் ரூமுக்கு சென்று எப்பவும் போல கிளம்பி கிளாசுக்கு செல்கிறார் ராஜி. அதன்பின்னர் பாண்டியன் வீட்டுக்கு வருகிறார். பாண்டியனுக்காக கோமதி அவசர அவசரமாக காஃபியை எடுத்து வந்து கொடுக்கிறார். அப்போது கைதவறி, காஃபி கோமதியின் கையில் சிந்திவிடுகிறது. இதனால் வலி தாங்க முடியாமல் கதறுகிறார் கோமதி. ஆனால் இதையெல்லாம் பொருட்படுத்தாத பாண்டியன், அதெல்லாம் சுடவே இல்லை, இவ நடிக்குறா என சொல்லிவிட்டு கிளம்பிச் செல்கிறார். இதனால் கோமதி ஃபீல் பண்ணுகிறார்.
மறுபுறம் மீனா கோவிலுக்கு செல்கிறார். அங்கு சரவணனும், அஞ்சலியும் ஜோடியாக உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். மீனா தன்னுடைய தோழியை பார்க்க தான் கோவிலுக்கு சென்றிருக்கிறார். அவர் தன்னுடைய அம்மாவை கவனித்துக் கொள்ள வேலைக்கு ஒரு ஆள் தேவைப்படுவதாக மீனாவிடம் சொல்லி இருக்கிறார். தோழியை பார்க்க வந்தபோது தான் கோவிலில் சரவணன், அஞ்சலியுடன் பேசிக் கொண்டிருப்பதை பார்த்துவிடுகிறார் மீனா. யார் இந்த பொண்ணு என்கிற குழப்பத்திலேயே அங்கிருந்து கிளம்பி சென்றுவிடுகிறார் மீனா.
55
தங்கமயிலுக்கு வேலை வாங்கித் தரும் மீனா
சரவணன் அஞ்சலியிடம், தங்கமயிலை பற்றிய உண்மைகள் எல்லாவற்றையும் சொல்கிறார். அவள் செய்த ஏமாற்று வேலைகளையும் சொல்கிறார். கோவிலில் இருந்து மீனா நேராக தங்கமயிலை பார்க்க அவருடைய வீட்டுக்கு செல்கிறார். அங்குபோய் உனக்கு வேலை ஒன்னு வந்திருக்கு என சொல்லும் மீனா, தன்னோட ஃபிரெண்டோட அம்மாவை பார்த்துக்க ஆள் தேவைப்படுகிறார்கள் என சொல்ல, தங்கமயிலும் அதற்கு ஓகே சொன்னதால், உடனே அவரை அழைத்து சென்று வேலையில் சேர்த்துவிடுகிறார் மீனா. இதையடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.