court fines vishal : 10 தடவ சொல்லியும் கேக்கல... கோர்ட்டின் பொறுமையை சோதித்த விஷாலுக்கு அபராதம் விதிப்பு

Ganesh A   | Asianet News
Published : Jan 04, 2022, 06:34 AM ISTUpdated : Jan 04, 2022, 06:36 AM IST

நடிகர் விஷாலின் அலுவலகத்தில் கடந்த 2016-ம் ஆண்டு நடந்த வருமான வரித்துறை சோதனையில், ரூ.1 கோடி அளவுக்கு வரி ஏய்ப்பு செய்ததற்கான ஆவணங்கள் சிக்கியதாக தகவல் வெளியானது.

PREV
16
court fines vishal : 10 தடவ சொல்லியும் கேக்கல... கோர்ட்டின் பொறுமையை சோதித்த விஷாலுக்கு அபராதம் விதிப்பு

தமிழ் சினிமாவில் ஆக்‌ஷன் ஹீரோவாக வலம் வருபவர் விஷால். இவர் நடித்த எனிமி திரைப்படம் கடந்தாண்டு தீபாவளிக்கு வெளியானது. ரஜினியின் அண்ணாத்த படத்துக்கு போட்டியாக வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து விஷால் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் திரைப்படம் ‘வீரமே வாகை சூடும்’. 
 

26

அறிமுக இயக்குனர் து.ப.சரவணன் இயக்கியுள்ள இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக இளம் நடிகை டிம்பிள் ஹயாத்தி நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, மலையாள நடிகர் பாபுராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

36

நடிகர் விஷால் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்ட்ரி மூலம் தயாரித்துள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

46

‘வீரமே வாகை சூடும்’ திரைப்படம் வருகிற பொங்கல் பண்டிகைக்கு அஜித்தின் வலிமை படத்துக்கு போட்டியாக களமிறங்க உள்ளது. இதுதவிர லத்தி, மார்க் ஆண்டனி, துப்பறிவாளன் 2 என பிசியான நடிகராக வலம் வரும் விஷாலுக்கு, தற்போது நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.

56

கடந்த 2016-ம் ஆண்டு நடிகர் விஷாலின் அலுவலகத்தில் நடந்த வருமான வரித்துறை சோதனையில், ரூ.1 கோடி அளவுக்கு வரி ஏய்ப்பு செய்ததற்கான ஆவணங்கள் சிக்கியதாக தகவல் வெளியானது. 

66

இந்த விவகாரத்தில் நடிகர் விஷாலுக்கு எதிராக, வருமான வரித்துறை தொடர்ந்த வழக்கில், நடிகர் விஷால் ஆஜராகக்கோரி 10 முறை சம்மன் அனுப்பி உள்ளனர். ஆனால் அவர் 10 முறையும் ஆஜராகவில்லை.  கோர்ட்டின் பொறுமையை சோதித்த நடிகர் விஷாலுக்கு, சென்னை எழும்பூர் நீதிமன்றம் ரூ.500 அபராதம் விதித்து உத்தரவிட்டது. 

Read more Photos on
click me!

Recommended Stories