Kamalhaasan 64: திரையுலகில் 64 வருடங்கள்! கமல்ஹாசனின் சாதனையை... காமன் டிபி-யுடன் கொண்டாடும் ரசிகர்கள்!

First Published | Aug 12, 2023, 12:29 PM IST

உலக நாயகன் கமலஹாசன் திரையுலகில் காலடி எடுத்து வைத்து 64 வருடங்கள் ஆவதை ரசிகர்கள் காமன் டிபி வெளியிட்டு கொண்டாடி வருகின்றனர்.
 

நவம்பர் 7, 1954 ஆம் ஆண்டு ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் சீனிவாசன் - ராஜலக்ஷ்மி தம்பதியர்களுக்கு இளைய மகனாக பிறந்தவர் தான் உலக நாயகன் கமல்ஹாசன். இவருடைய தந்தை ஒரு வழக்கறிஞர். கமலஹாசன் இவரின் சகோதரர்கள் அனைவரை விடவும் மிகவும் இளையவர் என்பதால், இவரை தங்களின் பிள்ளை போல் தான் அவர்கள் பார்த்தனர்.
 

மேலும் கமலஹாசன் நடிப்பு துறையில் ஈடுபட வேண்டும் என்பது, அவரின் தந்தை விருப்பமாக இருந்த நிலையில், தந்தையின் ஆசைப்படியே திரைப்பட துறையிலும், நடனத்திலும் தன்னுடைய கவனத்தை செலுத்தினார். ஏ.வி.எம்.மெய்யப்ப செட்டியாரின் மகன் ஏ.வி.எம் சரவணன் சிபாரிசின் பேரில், ஏவிஎம் தயாரிப்பான 'களத்தூர் கண்ணம்மா' திரைப்படத்தில் இவருக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்து. 1960 ஆம் ஆண்டு திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக தன்னுடைய கலை பணியை துவங்கினார்.

தயாராக இருக்கும் பிக்பாஸ் சீசன் 7 ப்ரோமோ..! எப்போது ரிலீஸ்? வெளியான லேட்டஸ்ட் தகவல்..!

Tap to resize

இதைத்தொடர்ந்து பார்த்தால் பசி தீரும், பாத காணிக்கை, கண்ணும் கரளும், வானம்பாடி, ஆனந்த ஜோதி, போன்ற பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. மேலும் களத்தூர் கண்ணம்மா திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான 
தேசிய விருதினை ஜனாதிபதி கைகளால் பெற்றார்.

இதைத்தொடர்ந்து 1973 ஆம் ஆண்டு, பாலச்சந்தரின் இயக்கத்தில் வெளிவந்த 'அரங்கேற்றம்' திரைப்படத்தின் மூலம் கமலஹாசன் ஒரு வாலிபராக அறிமுகமானார். பின்னர் கன்னியாகுமரி எனும் மலையாள படத்தில் தான் இவருக்கு முதல் முதலில் ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. முதல் படத்திலேயே சிறந்த நடிகருக்கான ஃபிலிம் ஃபேர் விருதையும் பெற்றார். இதைத்தொடர்ந்து அபூர்வ சகோதரர்கள், மூன்றாம் பிறை, நாயகன், இந்தியன், தேவர் மகன் போன்ற பல சிறந்த திரைப்படங்களில் நடித்ததற்கு தேசிய விருது உட்பட பல விருதுகளை வாங்கி குவித்தார்.

Jailer Box Office: இரண்டாவது நாளில் மளமளவென சரிந்த 'ஜெயிலர்' வசூல்..! இருந்தும் அடித்து நொறுக்கிய சாதனை..!

மேலும் இதுவரை கமலஹாசன் சிறந்த நடிகருக்கான நான்கு தேசிய விருதுகளையும்,  சிறந்த படம் என்ற முறையில் ஒரு தயாரிப்பாளராக ஒரு தேசிய விருதையும், 10 தமிழக அரசு விருதுகளையும், நான்கு ஆந்திர அரசின் நந்தி விருதுகளையும், 19 ஃபிலிம் ஸ்டார் விருதுகளையும் பெற்றுள்ளார். பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன், செவாலியர், என்.டி.ஆர் விருது, கலைமாமணி போன்ற பட்டங்களும் சொந்தக்காரர் கமல்ஹாசன்.

நடிகர், தயாரிப்பாளர், நடன இயக்குனர், பாடகர் என திரையுலகில் பன்முக திறமையாளராக விளங்கும் கமலஹாசன், சமீப காலமாக அரசியல்வாதியாகவும் ஜொலித்துக் கொண்டிருக்கிறார். அதை போல் இவர் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது.

அதிர்ச்சி நடிகர் வாசு விக்ரமின் தாயார் காலமானார்! முதல்வர் ஸ்டாலின் இரங்கல்!

1960 ஆம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்த நடிகர் கமலஹாசன் தற்போது தன்னுடைய திரையுலக வாழ்க்கையில் 64 வருடங்களை அடைந்துள்ளார். இதைத்தொடர்ந்து கமலஹாசனுக்கு ரசிகர்கள் பலர் காமன் டிபி வெளியிட்டு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். 

Latest Videos

click me!