ஆனால் 'ஆசை' திரைப்படம், அஜித்துக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடிக்க வாய்ப்புகள் குவிந்தது. கதை தேர்வில் கூடுதல் கவனம் செலுத்த துவங்கிய அஜித், காதல் கோட்டை, காதல் மன்னன், அவள் வருவாளா, உன்னிடத்தில் என்னை கொடுத்தேன், வாலி, அமர்க்களம், தீனா, சிட்டிசன், பில்லா, என நடித்த படங்கள் ரசிகர்கள் மத்தியில் வேற லெவல் வெற்றி கண்டதோடு... அஜித்தை வசூல் மன்னனாகவும் மாற்றியது.