விபத்தின் போது இர்பான் காரில் இருந்தாரா? இல்லையா? விசாரணையில் தெரியவந்த உண்மை - அதிரடி ஆக்‌ஷன் எடுத்த போலீஸ்

First Published | May 27, 2023, 2:24 PM IST

யூடியூபர் இர்பானுக்கு சொந்தமான பென்ஸ் கார் மோதியதில் மறைமலை நகரைச் சேர்ந்த பெண் ஒருவர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இர்பான்ஸ் வியூ என்கிற யூடியூப் சேனலை நடத்தி வருபவர் இர்பான். பல்வேறு ஊர்களுக்கு சென்று விதவிதமான உணவு வகைகளை சுவைத்து அதனை ரிவ்யூ செய்து அதனை வீடியோவாக எடுத்து தன் யூடியூப் சேனலில் பதிவிட்டு சம்பாதித்து வருகிறார் இர்பான். இவரது வீடியோக்கள் மக்கள் மத்தியில் மிகவும் ரீச் ஆனதால் தற்போது நன்கு பாப்புலர் ஆகிவிட்டார் இர்பான். இவரது யூடியூப் சேனல் 35 லட்சத்திற்கும் அதிகமான சப்ஸ்கிரைபர்களை கொண்டுள்ளது.

யூடியூபர் இர்பானுக்கு அண்மையில் திருமணம் நடந்தது. ஆசிபா என்பவரை திருமணம் செய்துகொண்ட இர்பானுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி தன் வீட்டுக்கே அழைத்து விருந்து கொடுத்தார். இதுகுறித்த வீடியோக்களையும் தனது யூடியூப் பக்கத்தில் பதிவிட்டிருந்தார் இர்பான். இந்த நிலையில், நேற்று சென்னையை அடுத்த மறைமலை நகரில் யூடியூபர் இர்பானுக்கு சொந்தமான பென்ஸ் கார் மோதியதில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

இதையும் படியுங்கள்... விஜய் படத்துக்கு ஆப்பு வைக்க முடிவெடுத்த தனுஷ்.. தீபாவளி ரேஸில் இருந்து கேப்டன் மில்லர் விலகியது இதற்குத்தானா?

Tap to resize

இதையடுத்து பலியானவர் 55 வயதான பத்மாவது என்பதும், அவர் புத்தேரியில் உள்ள தனியார் கல்லூரியில் காவலாளியாக பணியாற்றி வந்ததும் தெரியவந்தது. விபத்தை ஏற்படுத்திய காரை அசாருதீன் என்பவர் ஓட்டி வந்துள்ளார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அசாருதீனை கைது செய்தது. இந்த விபத்து நிகழ்ந்தபோது இர்பான் காரில் இருந்தாரா? இல்லையா? என்பது தான் பெரும் கேள்வியாக இருந்தது.

இதற்கான விடை போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. அதன்படி விபத்து நிகழ்ந்தபோது அந்த காரில் இர்பான் இருந்தது போலீஸ் விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது. ஆனால் காரை ஓட்டி வந்தது இர்பானின் மைத்துனர் அசாருதீன் என்பதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து அசாருதீன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 

இதையும் படியுங்கள்... மல்யுத்த வீராங்கனைகளுக்கு குரல்கொடுத்த நீங்க.. வைரமுத்து பற்றி பேசாதது ஏன்? கமலிடம் சின்மயி கேட்ட நறுக் கேள்வி

Latest Videos

click me!