சினிமாவில் இருந்து அரசியல் அளுமைகளாக மாறி, டிசம்பரில் மறைந்த தலைவர்கள்.. யார் யார்?

First Published | Dec 28, 2023, 5:22 PM IST

சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்தவர்கள் என்பதை தாண்டி எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, விஜயகாந்த் ஆகிய 3 பேருக்கும் ஒரு ஒற்றுமை உள்ளது தெரியுமா.?

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக தடம் பதித்தவர் கேப்டன் விஜயகாந்த். ரஜினி ,கமல் உச்சத்தில் இருந்த போது தொடர் வெற்றி படங்களில் நடித்து தனக்கென தனி இடத்தை பிடித்தவர். தனது திரை வாழ்க்கை முழுவதுமே தமிழ் படங்களில் மட்டுமே நடித்த வெகு சில நடிகர்களில் விஜயகாந்தும் ஒருவர்.

சட்டம் ஒரு இருட்டறை, மாநகர காவல், அம்மன் கோயில் கிழக்காலே, உழவன் மகன், புலன் விசாரணை, நானே ராஜா, நானே மந்திரி, பூந்தோட்ட காவல்காரன், ஊமை விழிகள், கேப்டன் பிரபாகரன், வைதேகி காத்திருந்தாள், சின்னக் கவுண்டர், சத்ரியன், தவசி, வானத்தைப்போல உள்ளிட்ட பல வெற்றி நடித்துள்ளார்.

Tap to resize

எல்லாருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற உயர்ந்த எண்ணம் கொண்ட விஜயகாந்த் தனது படங்களில் பணியாற்றுவோர் அனைவருக்கும் ஒரே மாதிரியாக உணவு போட்டவர். ஏனெனில் அப்போதெல்லாம் ஹீரோக்களுக்கு ஒரு வகை சாப்பாடு, துணை நடிகர்களுக்கு ஒரு வகை சாப்பாடு என்று வித்தியாசம் இருந்தது. ஆனால் தனது நண்பர் ராவுத்தருடன் இணைந்த தயாரிப்பு நிறுவனம் தொடங்கியது படத்தில் பணியாற்றும் அனைவருக்குமே ஒரே மாதிரியான உணவு போட்டவர். பல்வேறு நடிகர்களின் விஜயகாந்தின் இந்த செயல் குறித்து வெளிப்படையாக பேசி உள்ளனர்.

சினிமாவில் எப்படி தனது வெற்றியின் மூலம் தடம் பதித்தாரோ அதே போல் அரசியல் வாழ்க்கையிலும் பல வெற்றிகளை சுவைத்தார். 2005-ம் ஆண்டு தேமுதிக என்ற கட்சியை தொடங்கிய விஜயகாந்த் 2006-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் கணிசமான இடங்களில் வெற்றி பெற்றார். பின்னர் 2006 தேர்தலில் அதிமுக உடன் கூட்டணி அமைத்து எதிர்க்கட்சி தலைவரானார். பின்னர் அரசியலில் அவரின் செல்வாக்கு குறைந்த நிலையில் அவரிடன் உடல் நிலையும் குறைய ஆரம்பித்தது. இதனால் அரசியலில் இருந்து ஓய்வில் இருந்த அவர் இன்று (டிசம்பர் 28) உடல்நலக்குறைவால் காலமானார். 

ஆனால் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, விஜயகாந்த் ஆகிய 3 பேருக்கும் ஒரு ஒற்றுமை உள்ளது தெரியுமா. இவர்கள் மூவரும் சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்தவர்கள் மட்டுமல்ல. திரைத்துறையில் இருந்து அரசியல் ஆளுமைகளாக மாறி டிசம்பரில் உயிரிழந்துள்ளனர்.  

அந்த வகையில் சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்து தடம் பதித்தவர் பொன்மன செம்மல் எம்.ஜி.ஆர். சினிமா மற்றும் அரசியல் இரண்டிலுமே உச்சத்தில் இருந்த எம்.ஜி.ஆர் 3 முறை தமிழக முதலமைச்சராக இருந்தவர். அவர் டிசம்பர் 24-ம் தேதி காலமானார். 

தமிழகத்தில் அரசியல் புரட்சியை ஏற்படுத்தி திராவிடத்தின் தூணாக திகழ்ந்தவர் பெரியார். கடந்த 1879-ம் ஆண்டு ஈரோட்டில் பிறந்த பெரியார், கடவுள் மறுப்பு, பெண் கல்வி, பெண் சுதந்திரம், அரசியல் என இவர் கற்பிக்காத விஷயங்களே இல்லை என கூறலாம். இவர் தனது 94 வயதில் மரணம் அடைந்தார். பெரியாரும் டிசம்பரில் தான் உயிரிழந்தார். இவரது மறைவு நாள் 1973-ம் ஆண்டு டிசம்பர் 24ந் தேதி. 

இதே போல் புரட்சி தலைவி ஜெயலலிதாவும் சினிமா அரசியல் இரண்டிலுமே தடம் பதித்தவர். அரசியலில் பல அதிரடி முடிவுகளை எடுத்த ஜெயலலிதா துணிச்சலின் அடையாளமாக கருதப்பட்டவர். அவர் டிசம்பர் 5-ம் தேதி காலமானார். 

Latest Videos

click me!