தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ், அவர் நடிப்பில் தற்போது கேப்டன் மில்லர் திரைப்படம் தயாராகி வருகிறது. அருண்மாதேஸ்வரன் இயக்கும் இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தில் தனுஷ் உடன் பிரியங்கா மோகன், சந்தீப் கிஷான், ஷிவ ராஜ்குமார் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது. ஜிவி பிரகாஷ் இசையமைத்து வரும் இப்படம் வருகிற அக்டோபர் மாதம் ரிலீஸ் ஆக உள்ளது.
24
கேப்டன் மில்லர் படத்துக்கு பின்னர் தனுஷ் இயக்குனராக அவதாரம் எடுக்க உள்ளர். தனுஷின் 50-வது படமான இதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, விஷ்ணு விஷால், துஷாரா விஜயன், காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷான் ஆகியோருடன் இணைந்து தனுஷும் நடிக்க உள்ளார். வட சென்னையை மையமாக வைத்து இப்படம் தயாராக உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்திற்கான ஆரம்பக்கட்ட பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இதனிடையே சமீபத்தில் மும்பைக்கு சென்றிருந்த நடிகர் தனுஷ், நீண்ட தலைமுடி மற்றும் அடந்த தாடியுடன் ஆளே அடையாளம் தெரியாத வகையில் காட்சியளித்தார். கேப்டன் மில்லர் படத்துக்காக அவர் இந்த தோற்றத்தில் இருந்தார். அவரது புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் தனுஷ் பார்ப்பதற்கு பாபா ராம்தேவ் மாதிரி இருப்பதாக இருவரின் புகைப்படங்களையும் ஒப்பிட்டு ட்ரோல் செய்து வந்தனர்.
44
இந்த ட்ரோல் செய்யப்பட்ட புகைப்படங்கள் தனுஷ் கண்ணிற்கும் பட்டது போல தெரிகிறது. அதனால் தான் தற்போது முடியை சற்று குறைத்து, தாடியை ட்ரிம் செய்து புது லுக்கில் காட்சியளிக்கிறார் தனுஷ். மும்பையில் உள்ள ஸ்டூடியோ ஒன்றில் புது ஹேர்ஸ்டைலில் தனுஷ் வந்தபோது எடுத்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. அவர் பாலிவுட் இயக்குனர் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்க உள்ளதாகவும், அதன் டெஸ்ட் ஷூட்டிற்காக தான் முடியை வெட்டி புது ஹேர்ஸ்டைலுக்கு மாறி இருப்பதாகவும் கூறப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.