ஒரு அடார் லவ் திரைப்படத்தின் மூலம் மலையாள திரையுலகில் நடிகையாக காலடி எடுத்து வைத்தவர் பிரியா பிரகாஷ் வாரியர். அப்படம் ரிலீஸ் ஆகும் முன்பே இவர் கண்ணடிக்கும் காட்சி வெளியாகி காட்டுத்தீ போல் பரவி வைரலானது. இதனால் ஒரே நாளிலேயே உலகளவில் பேமஸ் ஆனார் பிரியா வாரியர். அந்த வீடியோ வைரலான பின்னர் இவரை ரசிகர்கள் செல்லமாக கண்ணழகி என்றே அழைக்கத் தொடங்கினர்.
கத்திரி வெயில் முடிந்தாலும் வெப்பம் குறந்தபாடில்லை. வெயில் வெளுத்துவாங்கி வருவதால், சினிமா பிரபலங்கள் பலரும் வெளிநாட்டுக்கு விறுட்டென பறந்து வருகின்றனர். அந்த வகையில் நடிகை பிரியா வாரியரும் தற்போது மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ளார். பொதுவாக மாலத்தீவுக்கு நடிகைகள் சுற்றுலா சென்றாலே நடிகைகள் முதலில் பதிவிடுவது பிகினி புகைப்படங்கள் தான்.
இதையும் படியுங்கள்... என்னடா நடக்குது... அனுஷ்காவின் கம்பேக் படத்திற்காக தனுஷ் பாடிய சர்ப்ரைஸ் பாடல் இதோ
அந்த லிஸ்ட்டில் நடிகை பிரியா வாரியரும் இணைந்துள்ளார். அவர் ப்ளூ நிற பிகினி உடையணிந்து மாலத்தீவு கடலில் கவர்ச்சி குளியல் போட்டபோது எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். பிரியா வாரியரின் பிகினி புகைப்படத்தை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள் என்ன சிம்ரன் இதெல்லாம் என கேட்டு வருகின்றனர். நடிகை பிரியா வாரியரின் பிகினி புகைப்படத்திற்கு லட்சக்கணக்கில் லைக்குகளும் குவிந்து வருகின்றன.
நடிகை பிரியா வாரியர் இப்படி திடீரென பிகினி உடையில் போட்டோஷூட் நடத்தியதற்கு பின்னணியில் ஒரு மாஸ்டர் பிளான் இருப்பதாகவும் கூறப்படுகிறது. அது என்னவென்றால், தற்போது வரை இளம் நடிகர்களுடனே ஜோடி போட்டு நடித்து வரும் பிரியா வாரியருக்கு முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடிக்க ஆசையாம். அதற்காக தான் இப்படி அதிரடியாக கவர்ச்சி காட்டி புகைப்படங்களை வெளியிட்டுள்ளாராம். அவரின் இந்த மாஸ்டர் பிளான் ஒர்க் அவுட் ஆகுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இதையும் படியுங்கள்... கோலிவுட்டின் சாக்லேட் பாய் மாதவனுக்கு இத்தனை கோடி சொத்துக்களா..! பலரும் அறிந்திடாத ஆச்சர்ய தகவல்