கோலிவுட்டின் சாக்லேட் பாய் மாதவனுக்கு இத்தனை கோடி சொத்துக்களா..! பலரும் அறிந்திடாத ஆச்சர்ய தகவல்

Published : Jun 01, 2023, 10:44 AM IST

நடிகர் மாதவன் இன்று தனது 53-வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், அவரின் சொத்து மதிப்பு பற்றி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

PREV
15
கோலிவுட்டின் சாக்லேட் பாய் மாதவனுக்கு இத்தனை கோடி சொத்துக்களா..! பலரும் அறிந்திடாத ஆச்சர்ய தகவல்

மணிரத்னத்தால் தமிழ் திரையுலகிற்கு அறிமுகம் செய்யப்பட்டவர் தான் நடிகர் மாதவன். அலைபாயுதே படம் மூலம் அறிமுகமான இவர், முதல் படத்திலேயே பெண்களின் மனதைக் கவர்ந்த நாயகனானது மட்டுமின்றி தமிழ் சினிமாவில் சாக்லேட் பாய் ஆகவும் வலம் வந்தார். இதையடுத்து கவுதம் மேனன் இயக்கத்தில் அவர் நடித்த மின்னலே திரைப்படமும் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனதால் மாதவனுக்கு கோலிவுட்டில் பட வாய்ப்புகள் குவியத் தொடங்கின.

25

கன்னத்தில் முத்தமிட்டால், ரன், அன்பே சிவம், ஜேஜே, ஆயுத எழுத்து என பல்வேறு வெற்றிப்படங்களை கொடுத்த மாதவன் இன்று தனது 53-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில், நடிகர் மாதவனின் சொத்து மதிப்பு, அவர் வாங்கும் சம்பளம், கார் கலெக்‌ஷன் உள்ளிட்டவை குறித்து இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

35

25 ஆண்டுகளுக்கு மேலாக திரையுலகில் வெற்றிகரமான நடிகராக வலம் வந்துகொண்டிருக்கும் மாதவனின் சொத்து மதிப்பு ரூ.105 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. இவருக்கு மும்பையில் ஆடம்பரமான பங்களா உள்ளது. அங்கு தான் தற்போது தன் மகன் மற்றும் மனைவி உடன் வசித்து வருகிறார். இதுதவிர சென்னையில் ரூ.18 கோடி மதிப்பில் நடிகர் மாதவனுக்கு ஒரு வீடு உள்ளது.

இதையும் படியுங்கள்.. பைக் ரேஸ்லாம் செட் ஆகாது... தனி ரூட்டில் அஜித் மகன்! குட்டி தல ஆத்விக்கின் திறமை பார்த்து வியந்துபோன ரசிகர்கள்

45

நடிகர் மாதவன் ஒரு படத்துக்கு ரூ.6 முதல் 8 கோடி வரை சம்பளமாக வாங்கி வருகிறார். இதுதவிர ஏராளமான விளம்பரங்களில் நடிப்பதன் மூலம் அவருக்கு ரூ.1 கோடி வரை வருவாய் கிடைக்கிறதாம். நடிகர் மாதவன் நடிப்பில் தற்போது தமிழில் டெஸ்ட் என்கிற திரைப்படம் உருவாகி வருகிறது. இதுதவிர திருச்சிற்றம்பலம் படத்தின் இயக்குனர் மித்ரன் ஆர் ஜவஹர் அடுத்ததாக இயக்கும் படத்திலும் மாதவன் நாயகனாக நடித்து வருகிறார்.

55

நடிகர் மாதவனுக்கு கார்கள் என்றால் மிகவும் பிடிக்குமாம். இதன் காரணமாகவே பிஎம்டபிள்யூ, ஆடி, ரேஞ்ச் ரோவர் போன்ற முன்னணி நிறுவனங்களின் சொகுசு கார்களை வாங்கியுள்ளாராம். இதுதவிர பைக் மீதும் அதீத காதல் கொண்டவரான மாதவன், உலகின் விலையுயர்ந்த பைக்குகளில் ஒன்றான BMW K1600 GTL பைக்கை வாங்கியுள்ளார். இதுதவிர ரூ.46 லட்சம் மதிப்புள்ள ரோட்மாஸ்டர் க்ரூஸரும் அவரிடம் உள்ளது.

இதையும் படியுங்கள்... லவ் பண்றீங்களா?... இல்லையா? அதிதி பற்றிய கேள்வியால் கடுப்பான சித்தார்த் - காதல் குறித்து அளித்த காட்டமான பதில் 

Read more Photos on
click me!

Recommended Stories