தளபதியை தொடர்ந்து அவரின் தந்தை எஸ்.ஏ.சி-யை சந்தித்த புஸ்ஸி ஆனந்த்! வைரலாகும் புகைப்படம்.!

Published : Sep 15, 2023, 05:53 PM IST

தளபதி விஜய் நேற்று, தன்னுடைய தந்தை எஸ்.ஏ.சிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது தெரியவரவே,  அமெரிக்காவில் இருந்து அவசர அவசரமாக வந்து, தந்தையை சந்தித்தார். இதைத்தொடர் விஜய்யின் மேலாளர் புஸ்ஸி ஆனந்த் இன்று விஜய்யை சந்தித்துள்ளார். இதுகுறித்த புகைப்படம் வைரலாகி வருகிறது.  

PREV
15
தளபதியை தொடர்ந்து அவரின் தந்தை எஸ்.ஏ.சி-யை சந்தித்த புஸ்ஸி ஆனந்த்! வைரலாகும் புகைப்படம்.!
Actor Thalapathy Vijay

தளபதி விஜய் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்துள்ள 'லியோ' திரைப்படம் அடுத்த மாதம் வெளியாக உள்ளது. இந்த படம் முடிந்த கையோடு, இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க உள்ள தளபதி 68 பட பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார் விஜய்.
 

25

மேலும் இந்த படத்தில், தளபதி மிகவும் யங் லுக்கில் நடிக்க உள்ளதாகவும், இதற்காக நவீன டெக்னாலஜியுடன் கூடிய லுக் டெஸ்ட் ஒன்றை செய்வதற்காக... வெங்கட் பிரபுவுடன் அமெரிக்காவுக்கு பறந்தார். அங்கு தன்னுடைய லுக் டெஸ்ட் முடிந்த கையோடு, அவசர அவசரமாக அமெரிக்காவில் இருந்து சென்னைக்கு கிளம்பி வந்தார் விஜய்.

காட்டுக்குள்ள போய் இதை செஞ்சாலும் செய்வேன்... பிக்பாஸ் வீட்டுக்கு போகமாட்டேன்! தடாலடியாக கூறிய நடிகை!

35

தளபதி சென்னை திரும்பியதற்கான முக்கிய காரணம், அவருடைய தந்தை தான் என கூறப்படுகிறது. சமீபத்தில் இது குறித்து தெரிவித்திருந்த எஸ்ஏசி, "தனக்கு கடந்த இரண்டு மாதங்களாகவே ஏதோ ஒரு மாதிரி இருந்தது. முன்பு போல் மிகவும் உற்சாகமாக எதையும் செய்ய முடியவில்லை. பின்னர் இதுகுறித்து மருத்துவரிடம் பரிசோதனை செய்தபோது, தனக்கு இதயத்தில் பிரச்சனை இருப்பது தெரிய வந்தது. பின்னர் உடனடியாக அதற்கான அறுவை சிகிச்சை செய்யப்பட்டது என கூறியிருந்தார்".
 

45
vijay

தன்னுடைய தந்தைக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது தளபதிக்கு தெரிய வரவே, உடனடியாக தன்னுடைய கோபங்கள், பகை போன்றவற்றை மறந்து தந்தையைக் காண அவசர அவசரமாக அமெரிக்காவில் இருந்து இந்தியா வரைந்தார். தந்தையை நேரில் சந்தித்து பல மணி நேரம் பேசி அவர், SAC உடல்நிலை குறித்தும் கேட்டறிந்துள்ளார். அப்போது தன்னுடைய தாய் ஷோபனா மற்றும் தந்தையுடன் விஜய் எடுத்துக்கொண்ட ஃபேமிலி போட்டோ சமூக வலைதளத்தில் வைரலானது.

Atlee Net Worth: 36 வயசு... இயக்கியது 5 படம் தான்!! அட்லீயின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?
 

55

விஜய் தன்னுடைய தந்தையை சந்தித்ததன் மூலம், பழைய எல்லாம் மறந்து மீண்டும் ஒன்று கூடி உள்ளது உறுதியாகியுள்ளது. விஜய்யை தொடர்ந்து அவரின் மேலாளர் புஸ்ஸி ஆனந்த், இன்று எஸ்.ஏ.சி-யை சந்தித்து அவரின் உடல்நலம் குறித்து விசாரித்துள்ளார். இது குறித்த புகைப்படத்தை எஸ்.ஏ.சி.. தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு "பிள்ளைகள் ஒன்று சேரும் போது பெற்றோருக்கு  மட்டும் அல்ல மொத்த குடும்பத்துக்கே  வலிமை கூடுகிறது என பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படமும் வைரலாகி வருகிறது".

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories