2025-ல் ரசிகர்களை ஏமாற்றி தயாரிப்பாளர்களை கதி கலங்க செய்த டாப் 4 படங்களின் பட்டியல்!

Published : Dec 10, 2025, 08:38 PM IST

Box Office Flops and Big Budget Disasters of 2025 : 2025-ல் ரசிகர்களின் எதிர்பார்ப்பைப் பொய்யாக்கிய டாப் 4 திரைப்படங்கள் என்னென்ன என்று இந்த தொகுப்பில் முழுமையாக பார்த்து தெரிந்து கொள்வோம்.

PREV
15
2025-ல் தயாரிப்பாளர்களை கதி கலங்க செய்த டாப் 4 படங்களின் பட்டியல்

2025 ஆம் ஆண்டில் அதிக எதிர்பார்ப்புடனும் ஆர்வத்துடனும் வெளியான படங்கள் ஒரு சில படங்களை வெற்றி படமாக அமைந்தது ஆனால் ஒரு சில படங்கள் பெரிய பெரிய நட்சத்திரங்கள் நடித்தும் வசூல் ரீதியாகவும் விமர்சனம் ரீதியாகவும் பின்னடைவை சந்தித்தன. அப்படிப்பட்ட படங்கள் என்னென்ன, எதனால் தோல்வியை தழுவியது என்று இந்த தொகுப்பில் பார்த்து தெரிந்து கொள்வோம்.

25
விடாமுயற்சி Vidaamuyarchi

தமிழ் சினிமாவில் அஜித் குமார் நடிப்பில் வெளியான விடாமுயற்சி' திரைப்படத்தின் பட்ஜெட் சுமார் ரூ.138 கோடி முதல் ரூ.200 கோடி வரை என தகவல்கள் தெரிவிக்கின்றன, ஆனால் இந்த திரைப்படம் 125 கோடி வரையில் மட்டுமே பாக்ஸ் ஆபிஸ் வசூல் எடுத்து மோசமான தோல்வியை சந்தித்தது. இதில் அஜித்தின் சம்பளம் மட்டும் ரூ.110-120 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் படம் வசூலில் தடுமாறி, தயாரிப்பு நிறுவனமான லைகாவுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியது என செய்திகள் வெளியாகியுள்ளன. படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தினை மகிழ் திருமேனி இயக்கி இப்படம் நஷ்டத்தை ஈட்டியது என்று கூறலாம். அஜித்தின் சினிமா கேரியரில் மோசமான விமர்சனத்தை இந்தப் படம் எதிர்கொண்டது.

35
தக் லைப் (Thug Life):

கமலஹாசன், சிம்பு மற்றும் மணிரத்தினம் கூட்டணியில் 2025 ல் வெளிவந்த படம் தான் தக் லைஃப். அதிக எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்தப் படத்தின் பட்ஜெட் என்னவோ ரூ.200 கோடி. ஆனால், இந்தத் திரைப்படம் 97 கோடி மட்டுமே வசூல் எடுத்துள்ளது என்று தகவல் தெரிவிக்கின்றது. இதன் மூலமாக படத்தின் தயாரிப்பாளரான மணிரத்தினம், கமல் ஹாசன் கூட்டணிக்கு பெரிய நஷ்டத்தை கொடுத்துள்ளது. படத்தில் பெரிய சுவாரஸ்யம் ஒன்றும் இல்லாத காரணத்தினால் இந்த படம் தோல்வியை அடைந்தது. இந்தப் படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இவரது இசையில் பாட்டு ஒன்று ஹிட் ஆனா நிலையில் படம் ஹிட் ஆகவில்லை என்பதே தமிழ் சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது.

45
ரெட்ரோ Retro:

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஆக்‌ஷன் த்ரில்லர் படமாக வெளியான படம் தான் சூர்யாவின் ரெட்ரோ. சூர்யா மற்றும் ஜோதிகாவின் 2D என்டர்டெயின்மென்ட் மற்றும் ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்தப் படத்தை தயாரித்துள்ளன. கிட்டத்தட்ட ரூ.65 கோடி பட்ஜெட்டில் உருவான இந்தப் படத்தில் சூர்யா சம்பளம் வாங்காமல் நடித்துள்ளார். காரணம், இந்தப் படத்தை எந்த தயாரிபபாளரும் தயாரிக்க முன் வரவில்லை. 

இதன் காரணமா சூர்யாவின் சொந்த தயாரிப்பு நிறுவனம் தயாரித்தது. அதனால், மற்ற நடிகர், நடிகைகளுக்கும் சம்பளம் குறைவாக கொடுக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. இந்தப் படத்தில் சூர்யாவின் ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருந்தார். இவர்களுடன் இணைந்து ஜெயராம், ஜோஜூ ஜார்ஜ், பிரகாஷ் ராஜ், நாசர் என்று ஏராளமான பிரபலங்கள் நடித்திருந்தனர். அதிக எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்தப் படம் வணிக ரீதியாக ஏமாற்றம் அளித்ததாகவும், மெதுவான வாய்மொழிப் பேச்சு மற்றும் கடுமையான போட்டி காரணமாக அதன் குறிப்பிடத்தக்க பட்ஜெட்டை முழுமையாக மீட்டெடுக்கத் தவறியதாகவும் சொல்லப்படுகிறது.

55
கேம் சேஞ்சர் Game Changer

ஷங்கர் இயக்கிய ராம் சரண் & கியாரா அத்வானி நடித்த இந்தியப் படமான கேம் சேஞ்சரின் பட்ஜெட் மிகப்பெரியது, சுமார் ரூ.450 கோடி என அறிவிக்கப்பட்டது , இது இந்தியாவின் மிகவும் விலையுயர்ந்த படங்களில் ஒன்றாக அமைந்தது, ஆடம்பரமான பாடல் காட்சிகளுக்கு குறிப்பிடத்தக்க செலவு நான்கு பாடல்களுக்கு சுமார் ரூ.75 கோடி மற்றும் பெரிய அளவில், இருப்பினும் அது பாக்ஸ் ஆபிஸில் மோசமாக ஓடியது என்று கூறலாம். இந்தியாவில் 131 கோடி மட்டுமே வசூல் குவித்ததாக சொல்லப்படுகிறது.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories