சந்திரகலா மீது கொலை முயற்சி; கைது செய்யப்படும் சீரியல் நடிகர் கார்த்திக்: கார்த்திகை தீபம் சீரியல் ஹைலைட்ஸ்!

Published : Dec 10, 2025, 06:48 PM IST

Karthigai Deepam Serial Today 1058th Episode Highlights : கார்த்திகை தீபம் சீரியலில் சந்திரகலா தனக்கு தானே குத்திக் கொண்டு கார்த்திக் தான் குத்தியதாக நாடகமாடும் நிலையில் அவர் கொலை முயற்சி குற்றத்திற்காக கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

PREV
16
Karthgai Deepam Serial Today 1058 Episode

கார்த்திகை தீபம் சீரியலில் சாமுண்டீஸ்வரியின் கோபத்தால் கார்த்திக் மற்றும் ரேவதி இருவரும் பிரிந்து தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர். சாமுண்டீஸ்வரிக்கு யார் நல்லவர்கள் யார் கெட்டவர்கள் என்று பிரித்து பார்க்க தெரியவில்லை. கண்மூடித்தனமாக எல்லாவற்றையும் நம்புகிறார். காளியம்மாள், சிவனாண்டி மற்றும் முத்துவேல் ஆகியோர் சேர்ந்து சாமுண்டீஸ்வரியை கொல்ல ரௌடிகளை அனுப்பிய நிலையில், கார்த்திக் தான் அவரையும், அவரது குடும்பத்தையும் காப்பாற்றினார்.

26
Zee Tamil Karthigai Deepam Serial

பஞ்சாயத்து தலைவரான சாமுண்டீஸ்வரி லஞ்சம் வாங்கியதாக லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகளுக்கு போன் செய்த சந்திரகலாவை கார்த்திக் ஏன் இன்னும் விட்டு வைத்திருக்கிறார் என்று தெரியவில்லை. தகவலின் பேரில் பஞ்சாயத்து அலுவலகத்திற்கு வந்த அதிகாரிகள் சாமுண்டீஸ்வரியிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது தங்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் அவரை கைது செய்ய அதிகாரிகள் முயற்சித்தனர்.

36
Chandrakala and Karthik

அப்போது காத்திக் அங்கு வந்து அது தங்கம் இல்ல சாக்லேட் என்று கூறி அவரை காப்பாற்றினார். மேலும், அவருக்கு அதனை கொடுத்தவர்களிடம் விசாரணை மேற்கொண்டால் யார் இப்படி செய்ய சொன்னது தெரியவரும் என்று அவர்களை மாட்டிவிட்டார். இந்த நிலையில் தான் கார்த்திக்கை பழி வாங்க வேண்டும் என்ற வெறியில் தனது உயிரையே பணையம் வைத்துள்ளார் சந்திரகலா. ஆம், லாக்கப்பில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கும் காளியம்மாள் கொடுத்த ஐடியாவின் பெயரில் சந்திரகலா ஒரு நாடகத்தை அரங்கேற்றினார்.

46
Chandrakala Drama Against Karthik

அதன்படி தனியாக ஒரு இடத்திற்கு சென்று முதலில் சாமுண்டீஸ்வரிக்கு போன் போட்டு இந்த மாதிரி கார்த்திக் தன்னை கொல்ல பார்க்கிறார் என்று அழுது புரண்டு நாடகமாடினார். பிறகு கார்த்திக்கை அந்த இடத்திற்கு வர வழைத்து தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் லேசாக குத்திவிட்டு கத்தியை கீழே போட்டார். இதனால் வலியால் துடித்த அவரை சாமுண்டீஸ்வரி மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் புரோமோ வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

56
Karthigai Deepam Serial Promo Video

இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள், நெட்டிசன்கள் பலரும் சகட்டுமேனிக்கு கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர். கார்த்திக் மற்றும் ரேவதி ரொமான்ஸ் காட்சிகளை ஒளிபரப்பு செய்யுங்கள், கார்த்திக்கை இப்படியெல்லாம் காட்டாதீர்கள், சாமுண்டி ஈஸ்வரிக்கு எப்போதும் புருஷன் பிள்ளைகளையும் அடக்க மட்டும் தான் தெரிந்தது மத்தபடி நல்லது கெட்டது தெரியவில்லை. 

66
Karthigai Deepam Serial Fans Comments

கார்த்திக் என்னதான் ரோல் கொடுக்குறீங்க கார்த்திக் ஜெயிக்கிற மாதிரி ஒரு சீன் கூட வர மாட்டேங்குது வில்லி தான் ஜெயிக்கிற இது எப்படி முறையடிக்கிறது கார்த்திக்கு சின்ன தவறுகள் பண்றவங்கள மன்னிக்கிறான் கொலை பண்றவங்கள போய் மன்னிச்சுட்டு மறுபடி அவங்கள வெளியே கூட்டிட்டு வந்து அவங்களுக்காக வீட்டுக்குள்ள வச்சிக்கிறது எல்லாம் நல்லாவா இருக்கு இதை கார்த்திக் உண்மையை முகத்தை உண்மையை காட்டனும்ல கார்த்திக்கு நீங்க என்னதான் ரோல் கொடுக்குறீங்க என்று பலரும் பலவிதமாக கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர். இதைத் தொடர்ந்து கூடிய விரைவில் சந்திரகலா பற்றிய எல்லா உண்மைகளையும் கார்த்திக் வெளிச்சம் போட்டு காட்டி ரேவதியுடன் சேர்ந்து வாழ்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories