Pandian Stores 2 Serial Today 658th Episode Highlights : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய 659ஆவது எபிசோடில் என்ன நடக்கிறது, தங்கமயில் என்ன செய்ய போகிறார் என்பது பற்றி பார்க்கலாம்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் தங்கமயில் பற்றிய எல்லா உண்மைகளையும் சரவணன் கூறிய பிறகு குடும்பமே இப்போது சின்னாபின்னமாகியுள்ளது. கதிர் மற்றும் ராஜீ ஒரு பக்கம், அரசி பக்கம், பாண்டியன் ஒரு பக்கம், கோமதி ஒரு பக்கம் என்று குடும்பமே நிலைகுலைந்து போயிருக்கிறது. இப்போது பாண்டியன் எல்லா உண்மைகளையும் தெரிந்த பிறகு என்ன செய்ய போகிறார்? தங்கமயில் அடுத்த என்ன செய்வார்? என்பது குறித்து இன்றைய 659ஆவது எபிசோடில் பார்க்கலாம்.
27
காலில் விழுந்து கதறி அழுத தங்கமயில்
நேற்றைய காட்சியில் பாண்டியன் காலில் விழுந்து தங்கமயில் மன்னிப்புக் கேட்டார். ஆனால், பாண்டியன் கொஞ்சம் கூட கண்டுகொள்ளவே இல்லை. இதையடுத்து கோபமான கோமதி போதும் நிறுத்து. இன்னும் எத்தனை நாள் தான் டிராமா போடுவ. மன்னிப்பு கேட்கிற மாதிரியான காரியமா நீ செய்து வச்சிருக்க. அடுக்கடுக்கா இத்தனை பொய்ய சொல்லி என்ன தைரியத்தோடு என் முன் வந்து நிற்கிற என்றெல்லாம் கேட்க, என்னை வார்த்தையால் கொல்லாதீங்க என்றார் மயில்.
37
அரசி, சரவணன், பாண்டியன் என்று வரிசையாக பேசிய மயில்
பிறகு அரசியிடம் சென்று பேசிய தங்கமயிலை கொஞ்சம் கூட மதிக்கவே இல்லை. என்னிடம் நீங்கள் பேசவே பேசாதீங்க என்றார். அடுத்ததாக சரவணனிடம் பேச சென்றார். ஆனால், அவரும் பேசவே இல்லை. பின்னர் மீண்டும் பாண்டியன் பக்கம் வந்தார். அப்போது என்னுடைய குடும்ப சூழல். ரொம்பவே கஷ்டம். என் வயது பெண்களுக்கு எல்லாம் திருமணம் நடந்தது. எனக்கு வயசாகிக்கிட்டே போனது. எனக்கு பிறகு என்னுடைய தங்கையும் இருந்தார்.
47
குடும்ப கஷ்டம், திருமணம் நடக்கவில்லை
அதனால், எப்படியாவது திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று சொல்லி தான் சுயம்வரத்திற்கு வந்தோம். அப்போது தான் உங்களை பார்த்தோம். நானும் எத்தனையோ முறை என் வீட்டில் சொன்னேன். ஆனால், அவர்கள் கேட்கவே இல்லை என்று கதறி அழுதார். கோமதி விடாமல் திட்டிக் கொண்டே இருந்தார். இதனால் ஆத்திரமடைந்த பாண்டியன் போதும். இனிமேல் இதைப் பற்றி யாரும் பேச வேண்டாம். உன்னுடைய அப்பா, அம்மாவை வர சொல். நீ போன் போட்டு வர சொல்றீயா இல்ல நான் வரச் சொல்லவா? என்று பாண்டியன் கேட்கவே, தனது ரூமுக்குள் சென்று கதவை பூட்டிக் கொண்டு நாடகமாடினார்.
57
தங்கமயிலின் அப்பா, அம்மாவிற்கு போன் போட்ட பாண்டியன்
இதனால் டென்ஷனான பாண்டியன் உடனே மயிலின் அம்மா, அப்பாவிற்கு போன் போட்டு உடனே வீட்டிற்கு வாங்க என்று சொல்லிவிட்டார். மயிலின் அப்பாவோ ஏதும் விசேஷமா? மயில் ஏதும் மாசமாக இருக்கிறாளா என்றெல்லாம் கேட்க, அமைதியாக இருந்த பாண்டியன் உடனே கிளம்பி வீட்டிற்கு வாங்க என்றார். இதைத் தொடர்ந்து ஆளாளுக்கு அவர்களது அறைக்கு சென்றுவிட்டார்கள். மயில் மட்டும் நடுவீட்டில் அழுது கொண்டே இருந்தார்.
67
பஞ்சாயத்துக்கு ஃபைசல் பண்ண வந்த குழலி
அடுத்ததாக பஞ்சாயத்துக்கு பைசல் பண்ண சரவணனின் அக்கா குழலி வீட்டிற்கு வந்தார். நல்ல குடும்பம் நல்ல குடும்பம் என்று சொல்லி தம்பி வாழ்க்கையை கெடுத்து வச்சிருக்கீங்க. களவாணி குடும்பத்துல பொண்ணு எடுத்து இப்படி இந்த நிலையில இருக்கிறோம். ஏண்டி இப்படி வாய்க்கு வந்த பொய்யெல்லாம் சொல்லி என்னுடைய தம்பியை ஏமாற்றியிருக்கிற, எத்தனை பொய். குழந்தை உண்டாகியிருக்கிறது என்று சொல்லி ஏமாத்தியிருக்கிற என்றெல்லாம் பேசிக்கிட்டே இருந்தார். அதோடு பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய முடிந்தது.
77
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் நாளைய எபிசோடு
இனி நாளை தங்கமயிலின் அம்மாவும், அப்பாவும் வீட்டிற்கு வருவார்கள். அதன் பிறகு சண்டைகளும், காட்சிகளும் நடக்கும் என்று இந்த வாரத்திற்கான புரோமோவில் பார்த்தோம். அதே போன்று நாளைய எபிசோடில் என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். தனது கடையில் மாணிக்கம் பணத்தை எடுத்ததை சரவணன் சொல்வாரா இல்லையா என்பதை நாளைய எபிசோடில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.