Vaa Vaathiyaar Release Date Postponed Again : கார்த்தி நடிப்பில் வரும் 12 ஆம் தேதி வெளியாக இருந்த வா வாத்தியார் படத்தை திட்டமிட்டபடி வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
2025 ஆம் ஆண்டு இன்னும் 20 நாட்களில் முடிய உள்ள நிலையில் இந்த ஆண்டில் இதுவரையில் கார்த்தி நடிப்பில் ஒரு படம் கூட வெளியாகவில்லை. வரும் 12ஆம் தேதி நாளை மறுநாள் வா வாத்தியார் படம் வெளியாக இருந்தது. ஆனால், அதற்கும் சென்னை உயர்நீதிமன்றம் செக் வைத்துள்ளது அது என்ன என்று முழுமையாக பார்க்கலாம்.
25
Krithi Shetty Vaa Vaathiyaar
இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள படம் தான் வா வாத்தியார். முழுக்க முழுக்க எம்ஜிஆர் பட டயலாக்கை கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தப் படத்தில் எம்ஜிஆர் தொடர்பான காட்சிகள் இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஞானவேல் ராஜாவின் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
35
Vaa Vaathiyaar Postponed
இந்தப் படத்தில் கார்த்தி உடன் இணைந்து கீர்த்தி ஷெட்டி, சத்யராஜ், ராஜ்கிரண், நிழல்கள் ரவி, ஆனந்தராஜ், கருணாகரன், வடிவுக்கரசி என்று ஏராளமான பிரபலங்கள் நடித்துள்ளனர். கீர்த்தி ஷெட்டிக்கு இது நேரடியான முதல் தமிழ் படம். கடந்த 2 ஆண்டுகளாக உருவாக்கப்பட்டு வந்த இந்தப் படத்தை 2025 ஜனவரி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டனர். ஆனால், திட்டமிட்டபடி ரிலீஸ் செய்யமுடியவில்லை. இதைத் தொடர்ந்து கடந்த 5 ஆம் தேதி வெளியாக இருந்தது. ஆனால், அப்போதும் வெளியாகவில்லை.
45
Vaa Vaathiyaar Delay Reason
பின்னர் வரும் 12 ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.இந்த நிலையில் தான் இந்தப் படத்தை வெளியிட சென்னை உயர்நிதிமன்றம் செக் வைத்துள்ளது. அர்ஜூன் லால் சுந்தர் தாஸ் என்பவரிடமிருந்து ஞானவேல் ராஜா ரூ.21.78 கோடியை கடனாக பெற்ற நிலையில் அதனை திருப்பி தரவில்லை. அந்தப் பணத்தை திருப்பி செலுத்தும் வரையில் படத்தை வெளியிட இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று லால் சுந்தர் உயர்நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார்.
55
Vaa Vaathiyaar Release Date
இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் ரூ.21.78 கோடியை செலுத்தும் வரையில் படத்தை வெளியிட தடை விதிக்கப்படும் என்று அறிவித்துள்ளது. இதன் காரணமாக படம் வரும் 12 ஆம் தேதி வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அறிவித்தபடி படம் வெளியாகுமா அல்லது மீண்டும் ரிலீஸிலிருந்து பின் வாங்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். அப்படி ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டால் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு படம் வெளியாக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.