தொலைக்காட்சிக்கும் ப்ரோமோஷன் செய்த போனி கபூர்...என்ன விஷயம் தெரியுமா?

Published : May 01, 2022, 03:35 PM IST

அஜித் பிறந்தநாளான இன்று சமீபத்தில் வெளியாகி ஹிட் கொடுத்த வலிமை படம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது. இது குறித்து தயாரிப்பாளர் போனி கபூர் ட்விட் பதிவு செய்துள்ளார்.

PREV
18
தொலைக்காட்சிக்கும் ப்ரோமோஷன் செய்த போனி கபூர்...என்ன விஷயம் தெரியுமா?
AJITH KUMAR

ஹிட் நாயகன் அஜித் குமாரின் பிறந்தநாள் இன்று அவரது பிறந்த நாளை ரசிகர்கள் ஒரு வாரத்திற்கு முன்பிருந்தே கொண்டாடி வருகின்றனர். அவரது பிறந்தநாளை முன்னிட்டு ரத்த தானம், ஏழைகளுக்கு உதவி என பல நல்ல விஷயங்களை செய்து ரசிகர்கள் மக்களைக் கவர்ந்து வருகின்றனர்

28
valimai

இதற்கிடையே சமீபத்தில் வெளியான அஜித்தின் ஹிட் படமான வலிமை தொலைக்காட்சியில் இன்று ஒளிபரப்பாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது

38
valimai

கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி வெளியான வலிமை படத்தை இயக்கியிருந்தார். இந்த கூட்டணியில் ஏற்கனவே நேர்கொண்டபார்வை வெளியாகியிருந்த நிலையில் மீண்டும் போனிகபூர், அஜித் கூட்டணி வலிமை உருவாகியுள்ளது.

48
VALIMAI

யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்திற்கு ஜிப்ரான் பின்னணி இசை அமைத்திருந்தார். அதோடு காலா பட நாயகி ஹீமா குரேஷி அஜித்தின் தோழியாக  நடித்திருந்தார்.

58
VALIMAI

அதிரடி போலீஸ் அதிகாரியாக வரும் அஜித்குமாரின் குடும்ப சென்டிமென்ட் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது. அதோடு அஜீத்தின் பைக் ஸ்டன்ட் ரியல் பைக் ஸ்டன்ட் ரசிகர்களிடம் ஒரு குதூகலத்தை ஏற்படுத்திவிட்டது.

68
valimai

சமீபகாலமாக பைக் ஸ்டண்ட் மூலம் நடந்து வரும் சமூக சீர்கேடுகளை மையமாகக் கொண்ட இந்தப் படத்தின் சண்டைக்காட்சிகள், பைக் ரேஸ்கள் என அதிரடியை  திரையரங்குகளில் காட்டியிருந்தது வலிமை.

78
valimai

முன்னதாக இரண்டரை வருட காத்திருப்புக்கு பிறகு தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என நான்கு மொழிகளில் உலகமெங்கும் வெளியாகியிருந்த வலிமை 235 கோடி பாக்ஸ் ஆபீஸ் வசூல் பெற்றதை தொடர்ந்து மார்ச் மாதம் ஓடிடிக்கு வந்தது. 

88
VALIMAI

இந்நிலைகள் அஜித் பிறந்தநாளை முன்னிட்டு ஜீ தமிழில் இன்று மாலை 6.30 க்கு ஒளிபரப்பாக உள்ள வலிமை குறித்து அதன் தயாரிப்பாளர் போனி கபூர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories