'வலிமை' குறித்து யாரும் எதிர்பாராத சூப்பர் அப்டேட் கொடுத்த போனி கபூர்..! தெறிக்கவிடும் ரசிகர்கள்..!

இதுவரை, வலிமை அப்டேட் குறித்து வாய் திறக்காமல் இருந்து வந்த, தயாரிப்பாளர் போனி கபூர்... ஃபோர்ப்ஸ் பத்திரிகைக்கு கொடுத்த பேட்டியில், மீண்டும் துவங்க உள்ள படப்பிடிப்பு முதல் ரிலீஸ் தேதி இறுதி செய்யப்பட உள்ள தகவல் வரை வெளியிட்டு தல ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
 

ஹெச்.வினோத் இயக்கத்தில் தல அஜித் வலிமை படத்தில் நடித்து வருகிறார். படத்தில் அஜித் போலீஸ் அதிகாரியாக நடிப்பதாக பூஜை போட்ட அன்று சொன்னதோடு சரி, அதன் பிறகு எந்த அப்டேட்டும் சொல்லமாட்டேன் என விடப்பிடியாக இருந்து வந்தார் தயாரிப்பாளர் போனி கபூர்.
போஸ்டர், பேனர், ட்ரெண்டிங் ஹேஷ்டேக் மூலமாக எல்லாம் அப்டேட் கேட்டு அலுத்து போன தல ஒரு கட்டத்தில், சமூக வலைத்தளத்தில் போனி கபூரிடம் சண்டை போடவே துவங்கி விட்டனர்.

சமீபத்தில் ஐதராபாத்தில் ரசிகர்களை சந்தித்த தல அஜித்திடம், அப்டேட் எப்போது என ரசிகர் கேட்ட கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு தல அஜித்தே விரைவில் என பதிலளித்ததாக சோசியல் மீடியாவில் தீயாய் தகவல்கள் பரவியது.
சமீபத்திய தகவலின் படி வலிமை படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகளை படம் பிடிப்பதற்காக ஒட்டுமொத்த படக்குழுவும் ஸ்பெயின் கிளம்ப தயாராகி வருகிறதாம். பைக்கில் அனல் பறக்கும் சண்டை காட்சிகளை அங்கு படமாக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.
அதையடுத்து மாஸ்டர் படத்தில் டாக்டர் மதி கதாபாத்திரத்தில் நடித்த நடிகை சங்கீதா, “வலிமை” படத்தில் 90 சதவீத படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும், விரைவில் படம் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட் வெளிவரும் என்று தெரிவித்துள்ளார்.மேலும் வலிமை படத்தில் தான் நடித்திருப்பதாக கூறும் சங்கீதா, அஜித்துடன் நடிக்கும் காட்சிகள் எனக்கு கிடைக்கவில்லை என்றும், இயக்குநர் வினோத்துடன் பணியாற்றிய அனுபவம் சிறப்பாக இருந்ததாகவும் தெரிவித்திருந்தார்.
‘வலிமை’ படத்தில் தல அஜித் குடும்பம் இதுதான் என ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை ரசிகர்கள் சோசியல் மீடியாவில் வேகமாக பகிர்ந்து வந்தனர்.
அதே நேரத்தில் யாராவது அப்டேட் கொடுக்க மாட்டார்களா? என ஆவலுடன் காத்திருந்த ரசிகர்களுக்கு தற்போது தயாரிப்பாளர் போனி கபூர் ஃபோர்ப்ஸ் பத்திரிக்கைக்கு கொடுத்துள்ள பேட்டி செம்ம வேட்டையாக அமைந்துள்ளது.
இதில் அவர் கூறியுள்ளதாவது, பிப்ரவரி 15 ஆம் தேதிக்குள் படப்பிடிப்பு முடிவடையும், ஒரே ஒரு ஸ்டண்ட் காட்சி மட்டும் வெளிநாட்டில் படமாக்கப்பட உள்ளது. அதே போல் போஸ்ட் புரோடுக்ஷன் பணிகள் விரைவில் துவங்கி, ரிலீஸ் தேதி இறுதி செய்யப்பட உள்ளது என தெரிவித்துள்ளார். இந்த தகவலை தல ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

Latest Videos

click me!