“குக் வித் கோமாளி” சிவாங்கிக்கு அடித்த ஜாக்பாட்... முதல் படமே டாப் ஹீரோவுடன் களமிறங்குறாங்க...!

First Published | Feb 10, 2021, 7:27 PM IST

அத்துடன் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலமாக ரசிகர்களின் மனம் கவர்ந்த சிவாங்கியும் டான் படத்தில் நடிக்க உள்ளார்.

நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ள டாக்டர் திரைப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. ரவிக்குமார் இயக்கத்தில், 24 ஏஎம் நிறுவனம் தயாரித்து வரும் படம் ‘அயலான்’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பும் நிறைவடைந்து கிராபிக்ஸ் உள்ளிட்ட போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகள் தீயாய் நடந்து வருகின்றன.
இதையடுத்து லைகா நிறுவனமும், சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷனும் ஒன்றாக இணைந்து டான் என்ற படத்தை தயாரிக்க உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. அட்லியிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்க உள்ள அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளது உறுதியாகியுள்ளது. இந்த படத்திற்கு ராக் ஸ்டார் அனிருத் இசையமைக்க உள்ளார்.
Tap to resize

இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக டாக்டர் படத்தில் அவருடன் சேர்ந்து நடித்த ஹீரோயின் பிரியங்கா மோகன் ஒப்பந்தமாகியுள்ளார். நடிகர் எஸ்.ஜே.சூர்யா முக்கிய வேடத்தில் நடிக்க தற்போது முன்னணி காமெடியனாக சூரி இந்த படத்தில் இணைந்துள்ளார்.
தற்போது மேலும் சில நடிகர்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. பிரபல காமெடிகள் நடிகர் முனீஸ்காந்த், பாலா சரவணன், காளி வெங்கட் ஆகியோருடன் ஆர்ஜே விஜய் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலமாக ரசிகர்களின் மனம் கவர்ந்த சிவாங்கியும் டான் படத்தில் நடிக்க உள்ளார். இது தான் சிவாங்கி வெள்ளித்திரையில் அடியெடுத்து வைக்கும் முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்னதாக குக் வித் கோமாளி சீசன் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற சிவகார்த்திகேயன் “எனக்கு இப்படி ஒரு தங்கச்சியே இல்லையே என பலமுறை நினைத்திருக்கிறேன்” என பாராட்டியது சோசியல் மீடியாவில் வைரலானது.

Latest Videos

click me!