ஆஸ்கர் வாங்குனதும் கார்த்திகி அம்போனு விட்டுட்டு போயிட்டா... பொம்மன் - பெல்லி தம்பதி குமுறல்

First Published Aug 4, 2023, 3:36 PM IST

தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ் ஆவணப்படத்தில் தோன்றிய பொம்மன் பெல்லி தம்பதி அப்படத்தின் இயக்குனர் கார்த்திகி கோன்சால்வஸ் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.

இந்தியர்களின் எட்டாக் கனியாக இருந்த ஆஸ்கர் விருதை, முதன்முதலில் தட்டிதூக்கி பெருமை சேர்த்தது தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ் என்கிற ஆவணப்படம் தான். முழுக்க முழுக்க முதுமலையில் படமாக்கப்பட்ட இந்த ஆவணப்படத்தை கார்த்திகி கோன்சால்வஸ் என்பவர் இயக்கி இருந்தார். இந்த ஆவணப்படம் ஆஸ்கர் வென்றதற்கு முக்கிய காரணம், அதில் நடித்திருந்த பொம்மன் பெல்லி தம்பதி தான். அவர்களின் வாழ்க்கையை படமாக்கி தான் இந்த ஆவணப்படத்திற்காக ஆஸ்கர் வென்றுள்ளார் கார்த்திகி.

ஆஸ்கர் விருது வென்றபின்னர் பிரதமர் மோடி முதல் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வரை ஏராளமான அரசியல் தலைவர்கள் முதுமலைக்கு வந்து பொம்மன் பெல்லி தம்பதியையும், அங்கு அவர் மேற்பார்வையில் உள்ள யானைகள் முகாமையும் பார்வையிட்டனர். இந்த எலிபெண்ட் விஸ்பரர்ஸ் ஆவணப்படம் மூலம் உலகளவில் பேமஸ் ஆகிவிட்டனர் பொம்மன் பெல்லி தம்பதி. 

இந்நிலையில், அவர்கள் இருவரும் தற்போது இயக்குனர் கார்த்திகி கோன்சால்வஸ் மீது பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். ஆஸ்கர் விருது வெல்லும் முன்னர் ஆவணப்படம் எடுக்கும்போது அன்பாக பழகியதாகவும், தற்போது எந்தவித உதவியும் செய்யாமல் ஏமாற்றிவிட்டதாகவும் கூறி உள்ளனர். தங்களுக்கு வீடு, கார், இடம் மற்றும் வங்கிக் கணக்கில் பணம் போட்டுள்ளதாக கார்த்திகி பேட்டிகளில் கூறுவது எதுவும் உண்மையில்லை. அனைத்தும் பொய் என பொம்மன் பெல்லி ஜோடி ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளனர்.

இதையும் படியுங்கள்... 500 தியேட்டர்களில் ரீ-ரிலீஸ் ஆன வாரணம் ஆயிரம்! அக்கட தேசத்தில் அலப்பறை கிளப்பும் சூர்யா- வைரலாகும் FDFS வீடியோ

மேலும் தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ் படத்தில் ஒரு திருமண விழா போன்று இடம்பெறும் ஒரு காட்சியை படமாக்கும் சமயத்தில், அவருக்கு தயாரிப்பு தரப்பில் இருந்து பணம் கொடுக்கவில்லை. உடனே எங்களிடம் உதவி கேட்டார். நாங்களும் போஸ்ட் ஆபிஸில் என் பேத்தியின் படிப்புக்காக போட்ட பணத்தை எடுத்துக் கொடுத்து அந்த காட்சியை எடுக்க உதவினோம். சுமார் ஒரு லட்சம் வரை வாங்கினார். அந்த பணம் இன்றுவரை எங்களுக்கு வரவில்லை என பொம்மன் பெல்லி தெரிவித்துள்ளனர்.

ஆஸ்கர் விருதுடன் எங்களை பாம்பேவுக்கு அழைத்து சென்று, ஒரு விழாவில் பங்கேற்க வைத்தார். அந்த விழாவில் போட்டோ எடுத்த பின்னர் யாரும் எங்களை கண்டுகொள்ளவில்லை. சரி ஊருக்கு கிளம்பலாம் என பணம் கேட்டால். அப்போது தன்னிடம் பணமில்லை என சொல்லி விட்டுட்டு போய்விட்டார். பின்னர் ஒருவர் செய்த உதவி மூலம் நாங்கள் தமிழகம் வந்தோம். 

இதுவரை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மட்டும் தான், எங்களை பார்க்க வந்தபோது ஒரு லட்சம் ரூபாய் கொடுத்தார். வேற யாரும் எதுவும் செய்யல. என் பேத்தியை நல்ல ஸ்கூல்ல சேர்த்து படிக்க வைக்குறேன்னு கார்த்திகி சொன்னா. ஆனா செய்யல என அடுக்கடுக்கான புகார்களை பொம்மன் பெல்லி முன் வைத்துள்ளனர். ஆஸ்கர் விருது வென்றபோது கொண்டாடப்பட்ட இந்த ஜோடி தற்போது அவல நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளதை பார்த்த நெட்டிசன்கள் அவர்களுக்கு அரசு உதவ வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... எதிர்நீச்சலை ஓரம்கட்டி கயல்..! டி.ஆர்.பி-யில் இதுவரை எந்த சீரியலும் செய்த சாதனை.. கேக் வெட்டி கொண்டாட்டம்!

click me!