பாலிவுட் நாயகன் அக்ஷய் குமாருக்கு கொரோனா தொற்று உறுதி!

Kanmani P   | Asianet News
Published : May 15, 2022, 01:11 PM IST

கடந்த மாதத்தில் குறைந்திருந்த கொரோனா தற்போது சற்று அதிகரித்துள்ளது. இந்நிலையில் பாலிவுட் நடிகர் அக்‌ஷய்குமாருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

PREV
14
பாலிவுட் நாயகன் அக்ஷய் குமாருக்கு கொரோனா தொற்று உறுதி!
akshay kumar

பாலிவுட் பிரபலமான அக்‌ஷய்குமார் தமிழில் 2.0 படத்தில் ரஜினிக்கு வில்லனாகவும் நடித்திருந்தார். இந்த படத்தில் வயதான தோற்றத்திலும் சரி, ஆத்மாவாக வரும் பொது சரி அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார் அக்‌ஷய்குமார் .

24
akshay kumar

30 வருடங்களுக்கு மேல் பாலிவுட்டில் கலக்கி வரும் இவருடன் தனுஷ் நடித்திருந்த அட்ராங்கி ரே. தமிழில் கலாட்டா கல்யாணம் என்னும் பெயரில் ஓடிடியில் வெளியாகி வரவேற்பை பெற்றிருந்தது. இதையடுத்து தற்போது இவர் நடித்து முடித்துள்ள ப்ரித்விராஜ் படம் வெளியாக உள்ளது.

34
akshay kumar

சுதா கொங்கரா இயக்கத்தில் சூரரைப்போற்று இந்தி ரீமேக்கில் பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ராதிகா மதன் நடிக்கிறார். இப்படத்தை அபுண்டண்டியா நிறுவனத்துடன் இணைந்து சூர்யா - ஜோதிகாவின் 2 டி நிறுவனம் தயாரிக்கிறது. அந்நிறுவனம் தயாரிக்கும் முதல் இந்தி படம் இதுவாகும்.

44
akshay kumar

OMG 2, ராம் சேது, கூர்கா, ரக்ஷா பந்தன்,உள்ளிட்ட படங்களில் கமிட்டாகியுள்ள அக்ஷய் குமார் அடுத்து வெளியாகவுள்ள ப்ரித்விராஜ் படம் ப்ரிமோசன் விழாவில் பிசியாக இருந்த நிலையில் இவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories