இந்தியாவின் முன்னணி பணக்காரராக திகழ்ந்து வருபவர் முகேஷ் அம்பானி. ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் தலைவரான இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். அதில் மூத்த மகன் ஆகாஷ் அம்பானிக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டது. இரண்டாவது மகனான ஆனந்த் அம்பானிக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளது.
216
அவருக்கும் ராதிகா மெர்சண்ட் என்பவரும் திருமண நிச்சயதார்த்த நிகழ்வு நேற்று மும்பையில் கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஏராளமான பாலிவுட் பிரபலங்களும், தொழிலதிபர்களும், அரசியல் தலைவர்களும் கலந்துகொண்டனர். அவர்களின் புகைப்படத் தொகுப்பு இதோ.
316
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் தனது மனைவியுடன் வந்து இந்த நிச்சயதார்த்த நிகழ்வில் கலந்துகொண்டார்.
416
பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகரான அக்ஷய் குமார், பிரவுன் நிற குர்த்தா அணிந்து ஸ்டைலிஷாக வந்து கலந்துகொண்டார்.
516
பாலிவுட்டில் முன்னணி தயாரிப்பாளரும், இயக்குனரும், தொகுப்பாளருமான கரண் ஜோகர், ஆனந்த் அம்பானி நிச்சயதார்த்ததில் கலந்துகொண்டபோது எடுத்த புகைப்படம்.
616
பாலிவுட் நடிகர் சல்மான் கான், தனது சகோதரியின் மகளும், பாலிவுட்டில் நடிகையாக அறிமுகமாக உள்ளவருமான அலிசே அக்னிகோத்ரியுடன் வந்தபோது எடுத்த புகைப்படம்.
716
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள்களான ஜான்வி கபூரும், குஷி கபூரும் ஒன்றாக வந்து ஆனந்த் அம்பானி நிச்சயதார்த்ததில் கலந்துகொண்டனர்.
816
பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மனைவி கவுரி கான் தனது மகன் ஆர்யன் கான் உடன் ஆனந்த் அம்பானி நிச்சயதார்த்ததில் கலந்துகொண்டபோது எடுத்த புகைப்படம்.
916
நடிகை சையிப் அலிகானின் மகளும், இளம் பாலிவுட் நடிகையுமான சாரா அலிகான் வெள்ளை நிற உடையில் தேவதை போல் வந்திருந்தார்.
1016
பாலிவுட் திரையுலகின் ஸ்டைலிஷ் நடிகரான ஜான் அபிரஹாம் சிங்கிளாக வந்து ஆனந்த் அம்பானி நிச்சயதார்த்ததில் கலந்துகொண்டார்.
1116
நடிகர் வருண் தவான் தனது மனைவி நடாஷா தலால் உடன் ஜோடியாக வந்து ஆனந்த் அம்பானி நிச்சயதார்த்ததில் கலந்துகொண்டனர்.
1216
நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன் தனது மகள் ஆராத்யா உடன் வந்து அம்பானி வீட்டு நிச்சயதார்த்த நிகழ்வில் கலந்துகொண்டார்.
1316
துணிவு படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர், தனது மகனும், பாலிவுட் நடிகருமான அர்ஜுன் கபூர் உடன் வந்தபோது எடுத்த புகைப்படம்.
1416
பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வரும் கத்ரீனா கைஃப், அம்பானி வீட்டு நிச்சயதார்த்த நிகழ்வில் கலந்துகொண்டபோது எடுத்த புகைப்படம்.
1516
பாலிவுட்டின் நட்சத்திர ஜோடியான ரன்வீர் சிங்கும் தீபிகா படுகோனேவும் ஆனந்த் அம்பானி நிச்சயதார்த்ததில் கலந்துகொண்டபோது எடுத்த புகைப்படம்.
1616
லைகர் படத்தின் நாயகி அனன்யா பாண்டே அம்பானி வீட்டு நிச்சயதார்த்த நிகழ்வில் கலந்துகொண்டபோது எடுத்த புகைப்படம்.