Mrunal Thakur
தொடர்ச்சியாக மராத்தி மொழி திரைப்படங்களில் நடித்து வந்த மிருனால் தாக்கூர், கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் ஹிந்தி மொழி படங்களிலும், 2022 ஆம் ஆண்டு முதல் தெலுங்கு மொழி திரைப்படங்களிலும் தொடர்ச்சியாக நடித்து வருகிறார். பிரபல மலையாள திரையுலக நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில், கடந்த 2022ம் ஆண்டு வெளியான "சீதா ராமம் என்கின்ற திரைப்படம் மிருனால் தாக்கூருக்கு மிகப்பெரிய வரவேற்பை கொடுத்தது.
Actress Mrunal Thakur
இறுதியாக தெலுங்கு மொழியில் இந்த 2024ம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய அளவில் ஹிட்டான "கல்கி 2898 AD" திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரம் ஏற்று நடித்திருந்தார் மிருனால் தாக்கூர். தொடர்ச்சியாக ஹிந்தியில் மட்டும் ஐந்து திரைப்படங்களில் இப்போது அவர் பிஸியாக நடித்த வருகிறார். எதிர்வரும் 2025ம் ஆண்டு முடிவு வரை அவருக்கான கால்ஷீட் நீண்டு வருகிறது.