Suniel Shetty House: காட்டுக்கு நடுவே ஒரு கண்ணாடி மாளிகை! சுனில் ஷெட்டியின் 20 கோடி சொகுசு வீட்டின் போட்டோஸ்!

Published : Jul 14, 2026, 03:02 PM IST

பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டியின் கண்டாலாவில் அமைந்துள்ள 'ஜஹான்' (Jahaan) ஃபார்ம்ஹவுஸ் பண்ணை வீடு, ஒரு லக்சரி ரிசார்ட்டுக்கு சற்றும் குறைந்தது இல்லை. 20 கோடி ரூபாய் மதிப்பு. இதுகுறித்து பார்க்கலாம்.

PREV
17
பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி

பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டியின் கண்டாலாவில் அமைந்துள்ள 'ஜஹான்' (Jahaan) ஃபார்ம்ஹவுஸ், வெறும் வீடு மட்டுமல்ல, அது ஒரு இயற்கை எழில் கொஞ்சும் சொகுசு ரிசார்ட். சுமார் 20 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த இல்லம், நவீன கட்டுமானத்திற்கும் இயற்கைக்கும் நடுவே கட்டப்பட்டுள்ள இந்த வீடு, நவீன வசதிகளுடன் இயற்கையோடு இணைந்து புதிய அனுபவத்தை கொடுக்கிறது.

27
இயற்கையின் மடியில் ஒரு இல்லம்
சுனில் ஷெட்டியின் வீட்டின் மிகப்பெரிய சிறப்பம்சமே அதன் 'இயற்கை சார்ந்த' வடிவமைப்புதான். வீட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் மரங்கள் மற்றும் பாறைகள் அப்படியே வைக்கப்பட்டுள்ளன. சில இடங்களில், பெரிய மரங்கள் வீட்டின் கூரை மற்றும் முற்றத்தின் வழியாக செல்வதைப் பார்க்கலாம். இது ஒரு காட்டின் நடுவில் அமைந்திருக்கும் எக்கோ-ரிட்ரீட் போன்ற உணர்வைத் தருகிறது.
37
கண்ணாடி மாளிகை
சுனில் ஷெட்டியின் வீட்டில் இந்த கண்ணாடி மாளிகைதான் சென்டர் ஆஃப் அட்ராக்‌ஷன். இதன் கூரையை தேவைப்படும்போது திறக்கவோ அல்லது மூடவோ முடியும். உள்ளே அழகான சோஃபா மற்றும் செடிகள் வைத்து அலங்கரித்துள்ளனர்.
47
லிவிங் ரூம்

மிகப்பிரம்மாண்டமான லிவிங் ரூமில், மரத்தாலான ஃபர்னிச்சர்கள் மற்றும் கலைநயமிக்க ஷோ-பீஸ்கள் வீட்டின் அழகை மெருகூட்டுகின்றன. சுவரில் சுனில் ஷெட்டியின் படங்களின் ஃபிரேம்கள் அலங்கரிக்கின்றன.

57
சுவரில் சுனில் ஷெட்டி படங்கள்
சுனில் ஷெட்டியின் ஃபார்ம்ஹவுஸில் பிரைவேட் நீச்சல் குளம், ஹோம் தியேட்டர் போன்ற வசதிகளும் உள்ளன. வசதியான சோஃபாக்கள் மற்றும் இருக்கைகள் போடப்பட்டுள்ளன. சுவரில் சுனில் ஷெட்டியின் படங்களின் ஃபிரேம்களும் மாட்டப்பட்டுள்ளன.
67
பெரிய மரச் சிற்பங்கள்

சுனில் ஷெட்டி பல பேட்டிகளில், தனக்கு மரம், செடிகள் மற்றும் இயற்கை மீது அதிக பிரியம் உண்டு. அந்த எண்ணத்தில்தான் இந்த வீட்டைக் கட்டியுள்ளார். வீட்டின் அலங்காரத்தில் பெரிய மரச் சிற்பங்கள் வைக்கப்பட்டுள்ளன. காய்ந்த மரக்கிளைகளைக் கூட அலங்காரத்திற்காகப் பயன்படுத்தியுள்ளனர்.

77
ஆன்மீகம்

வீட்டின் இன்டீரியரில் மண் நிறங்கள், இயற்கை ஒளி மற்றும் திறந்த வெளிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. இங்குள்ள சிவன் சிலை, அமைதியாக அமர்வதற்கான இடங்கள் மற்றும் மலைகளின் அழகிய காட்சி ஆகியவை இந்த வீட்டை மற்ற செலிபிரிட்டி வீடுகளிலிருந்து வேறுபடுத்துகின்றன. சுனில் ஷெட்டி தனது குடும்பத்தினருடன் சேர்ந்து நூற்றுக்கணக்கான மரங்களை நட்டு இந்த முழுப் பகுதியையும் பசுமையாக மாற்றியுள்ளார்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories