தனியா ஓடி தங்க மெடல் வாங்குவது வீரமல்ல... பயம்! ரஜினியை விடாமல் விரட்டும் ப்ளூ சட்டை மாறன்

First Published | Aug 6, 2023, 10:22 AM IST

ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் தனியாக ரிலீஸ் ஆவதை கிண்டலடிக்கும் விதமாக ப்ளூ சட்டை மாறன் போட்டுள்ள பதிவு வைரலாகி வருகிறது.

ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10-ந் தேதி திரைக்கு வர உள்ளது. இப்படத்திற்கான முன்பதிவு இன்றுமுதல் தமிழ்நாட்டில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஜெயிலர் படத்தின் ரிலீஸ் ஃபீவர் தற்போதே தொடங்கிவிட்டது என்று தான் சொல்ல வேண்டும். இப்படத்தின் ரிலீஸுக்காக சில நிறுவனங்கள் ஆகஸ்ட் 10-ந் தேதி விடுமுறை அறிவித்த நிகழ்வுகளும் அரங்கேறி இருக்கின்றன.

ஜெயிலர் படத்திற்கு அதிகாலை காட்சிகள் போட தமிழகத்தில் அனுமதி கிடைக்காததால் முதல் காட்சியே காலை 9 மணிக்கு தான் ஆரம்பம் ஆக உள்ளது. இதன்காரணமாக தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்கிலும் ஜெயிலர் படத்தை திரையிட திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி ஜெயிலர் படத்துக்கு போட்டியாக தமிழ்நாட்டில் வேறு எந்த படமும் ரிலீஸ் ஆகவில்லை. இதனை சர்ச்சைக்குரிய சினிமா விமர்சகரான ப்ளூ சட்டை மாறன் விமர்சித்துள்ளார்.

இதையும் படியுங்கள்... நண்பேண்டா! ரஜினி முதல் விஜய் வரை... ரியல் லைஃப்பிலும் நட்போடு இருக்கும் நம்ம கோலிவுட் ஸ்டார்ஸ் பற்றி தெரியுமா?

Tap to resize

இதுகுறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது : “தனியாக ஓடி தங்க மெடல் வாங்கி இருந்தால் உசைன் போல்ட்டுக்கு மரியாதை இல்லை. 'ஒவ்வொரு முறையும்' பலருடன் போட்டியிட்டு வென்றதால்தான் நம்பர் 1 என உலகம் போற்றியது. ஆனால் தலைவரோ 10 ஆம் தேதி தனியே ஓடுவாராம். இதற்குப்பெயர் மாஸாம். கூஸ் பம்ப்ஸாம். 

பிகிலுடன் கைதியும் வெற்றி பெற்றது. பீஸ்ட்டை KGF 2 போட்டு தள்ளியது. பொங்கலுக்கு வந்த பேட்டயை விட விஸ்வாசம் அதிக வசூலை குவித்தது. தனியே வந்தாலும்.. தர்பார் தேறவில்லை. கார்த்தி, யஷ், விஜய் அல்லது அஜித்துடன் மோதியிருந்தால் தலைவர் நாக் அவுட் ஆகி இருப்பார். இந்தியன் 2 வோடு மோதினாலும்  இதுதான் கதி.

எல்லா தியேட்டரையும் வளைத்து பிடித்து மாஸ் காட்டுவது வீரமல்ல. பயம். Identity crisis..அப்பறம் என்ன..50 கோடி, 200, 300 கோடி ஃபோட்டோஷாப் போஸ்டர் எல்லாம் ரெடிதான? குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி!! ஸ்டார்ட் மியூசிக்” என ரஜினியை சரமாரியாக விமர்சித்துள்ளார் ப்ளூ சட்டை. இதைப்பார்த்து கொந்தளித்த ரஜினி ரசிகர்கள் அவரை சாடி வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... அடடேய்... கவினின் வருங்கால மனைவி மோனிகா; லாஸ்லியாவின் தோழியா? இதென்னடா புது டுவிஸ்டா இருக்கு!

Latest Videos

click me!