தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஐந்து மாதங்கள் இருக்கும் நிலையில், அதற்குள் நான்கு படங்கள் தீபாவளி ரிலீஸை டார்கெட் செய்துள்ளன. அது என்னென்ன படங்கள் என்பதை பார்க்கலாம்.
Tamil Movie Releases For Diwali 2025 : தீபாவளி பண்டிகை என்றாலே புதுப்படங்களும் போட்டி போட்டு ரிலீஸ் ஆகும். 2025-ம் ஆண்டு தீபாவளி பண்டிகை வருகிற அக்டோபர் மாதம் 20ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஐந்து மாதங்கள் இருக்கும் நிலையில், அதற்குள் தீபாவளி ரிலீசுக்கு தமிழ் படங்கள் தயாராகி வருகின்றன. இந்த ஆண்டு தீபாவளி ரிலீசுக்காக தற்போதே நான்கு தமிழ் படங்கள் போட்டியிட காத்திருக்கின்றன. அது என்னென்ன படங்கள் என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
25
துருவ் விக்ரமின் பைசன் காளமாடன்
பைசன்
பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன், வாழை போன்ற வெற்றிப்படங்களை இயக்கியவர் மாரி செல்வராஜ். இவர் இயக்கத்தில் அடுத்ததாக உருவாகி உள்ள படம் பைசன். இப்படத்தில் துருவ் விக்ரம் நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ள இப்படம் கபடியை மையமாக வைத்து உருவாகி உள்ளது. இப்படம் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
35
கார்த்தி நடிக்கும் சர்தார் 2
சர்தார் 2
பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடித்து கடந்த 2022-ம் ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸ் ஆன படம் சர்தார். அப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இப்படத்தில் கார்த்தி உடன் மாளவிகா மோகனன், ஆஷிகா, ரெஜிஷா ஆகியோர் நடிக்கின்றனர். இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைக்கிறார். இப்படமும் இந்த ஆண்டு தீபாவளிக்கு திரைக்கு வர உள்ளது.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள படம் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி. இப்படத்தில் பிரதீப்புக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார். இப்படத்தை செவன் ஸ்கிரீன் நிறுவனமும், ரெளடி பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தையும் இந்த ஆண்டு தீபாவளிக்கு திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு உள்ளனர்.
55
சூர்யா
சூர்யா 45
ரெட்ரோ படத்தின் வெற்றிக்கு பின் நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் சூர்யா 45 திரைப்படத்தை ஆர்.ஜே.பாலாஜி இயக்கி உள்ளார். இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்து உள்ளார். இப்படமும் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை குறிவைத்து ரிலீஸ் ஆக உள்ளது.