42 வயதில் ராணி போல் ஜம்முனு வாழும் நடிகை திரிஷா; இத்தனை கோடி சொத்துக்கு சொந்தக்காரியா?

Published : May 04, 2025, 08:27 AM IST

நடிகை திரிஷா இன்று தனது 42வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், அவரின் சொத்து மதிப்பு குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

PREV
19
42 வயதில் ராணி போல் ஜம்முனு வாழும் நடிகை திரிஷா; இத்தனை கோடி சொத்துக்கு சொந்தக்காரியா?

Happy Birthday Trisha Krishnan : ஹீரோக்களை போலவே ஹீரோயின்களும் சினிமா துறையில் நீடிக்க முடியுமா என்ற விவாதம் வரும்போதெல்லாம், நடிகை திரிஷாவை கண்முன்னே நிறுத்தி பார்க்கலாம். கிட்டத்தட்ட 25 வருடங்களாக சினிமாவில் நீடிக்கும் கோலிவுட் குயின் திரிஷா. எக்காரணத்தை கொண்டும் சினிமாவில் கால்பதிக்க மாட்டேன் என்று தன்னுடைய கல்லூரி காலங்களில் சொல்லிய திரிஷா, இன்று தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஐகான் ஆக திகழ்ந்து வருகிறார்.

29
திரிஷா

மாடலிங்கில் சாதித்த திரிஷா

கிருஷ்ணன் - உமா தம்பதியருக்கு ஒரே ஒரு மகளான திரிஷா, 1983-ம் ஆண்டு மே மாதம் 4ந் தேதி சென்னையில் பிறந்தார். தனது பள்ளிப் படிப்பை சென்னை சர்ச் பார்க்கில் உள்ள பள்ளியில் முடித்த திரிஷா, சென்னை எத்திராஜ் கல்லூரியில் பிபிஏ பட்டம் பெற்றார். பள்ளி காலத்திலேயே மாடலிங் துறையில் கால்பதித்தார் திரிஷா. அதைத்தொடர்ந்து 1999-ம் ஆண்டு மிஸ் சேலம், மிஸ் மெட்ராஸ் பட்டங்களை வென்றார். 

39
திரிஷா கிருஷ்ணன்

திரிஷா அறிமுகமான படம்

ஒரு நகைக்கடை விளம்பரம் மூலம் தான் திரிஷாவுக்கு முதல் பட வாய்ப்பு கிடைத்தது என்று சொன்னால் நம்ப முடிகிறதா... அதுதான் நிஜம். அதைவிட ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால், அதே நகைக்கடை விளம்பரத்தில் திரிஷாவின் தோழியாக சமந்தா நடித்திருந்தார். தன் வாழ்க்கையில் சினிமாவில் நடிக்க மாட்டேன் என்று சொல்லி வந்த திரிஷா, நடிகை சிம்ரனின் தோழியாக ஜோடி படத்தின் மூலம் முதன்முதலில் நடிகையாக அறிமுகமானார்.

49
தக் லைஃப் நாயகி திரிஷா

மெளனம் பேசியதே நாயகி திரிஷா

அதற்கு பின் தமிழ் சினிமா திரிஷாவை தன்வசம் ஈர்த்துக் கொண்டது. அதன்பின்னர் லேசா லேசா படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தம் ஆனார். ஆனால் அதற்கு முன்னதாகவே மெளனம் பேசியதே வெளியானதால், அதுவே அவரது அறிமுக படமாக மாறியது. அப்படத்தில் எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல், நகரங்களில் இருக்கும் ஒரு சாதாரண பெண்ணின் சாயலை அப்படியே திரையில் கொண்டு வந்தார் திரிஷா. அப்படத்தில் வரும் ‘தனியாவா... பேசலாமே’ என்று திரிஷா பேசும் டயலாக் இன்றளவும் பேமஸ் ஆக உள்ளது.

59
திரிஷா சம்பளம்

திருப்புமுனை தந்த கில்லி

திரிஷாவை தமிழ் சினிமாவும், ரசிகர்களும் அதிகம் கவனிக்க வைத்த திரைப்படம் சாமி. அதில் காமெடி, ரொமான்ஸ் என அனைத்து தரப்பு நடிப்பையும் அதில் புவனா கேரக்டரில் அள்ளிவீசி இருந்தார் திரிஷா. அதற்கு பின் அலை, எனக்கு 20 உனக்கு 18, சம்திங் சம்திங் உள்ளிட்ட படங்களில் நடித்த இவர் மற்ற மொழி திரைப்படங்களிலும் கால் பதித்தார். திரிஷாவினுடைய சினிமா வாழ்க்கையில் முக்கிய திருப்புமுனையாக அமைந்த திரைப்படம் கில்லி. 

69
திரிஷா வயது

விஜய் - திரிஷா ஜோடி

கில்லி படத்தில் நடுத்தர வர்க பெண்ணாக தனலட்சுமியாகவே வாழ்ந்திருப்பார் திரிஷா. காதல் காட்சிகள், பிரகாஷ் ராஜ் உடனான காட்சிகள் என அனைத்திலும் தன்னுடைய பெஸ்டை காட்டி இருப்பார் திரிஷா. கில்லி திரைப்படம் விஜய், பிரகாஷ் ராஜை எந்த அளவுக்கு கவனிக்க வைத்ததோ, அதே அளவு திரிஷாவையும் கவனிக்க வைத்தது. அதற்கு பின் விஜய்யுடன் திருப்பாச்சி, ஆதி, குருவி, லியோ உள்ளிட்ட படங்களிலும் இணைந்து நடித்தார் திரிஷா.

79
திரிஷா படங்கள்

அஜித் - திரிஷா கூட்டணி

தளபதி ஒரு பக்கம் என்றால் தல அஜித்துடனும் ஜோடி சேர்ந்தார் திரிஷா. கிரீடம், மங்காத்தா, என்னை அறிந்தால், விடாமுயற்சி, குட் பேட் அக்லி ஆகிய படங்களில் அஜித்துடன் கூட்டணி சேர்ந்து படத்தின் வெற்றியை பங்கிட்டுக் கொண்டார் திரிஷா. அபியும் நானும் படத்தில் செல்ல மகள் அபியாக, சம்திங் சம்திங் படத்தில் தங்கை கவிதாவாக... விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படத்தில் ஜெஸ்ஸியாக... பீமா படத்தில் ஷாலினியாக... சர்வம் படத்தில் சந்தியாவாக... 96ல் ஜானுவாக... பொன்னியின் செல்வனில் குந்தவையாக என அனைத்து கதாபாத்திரத்திலும் தன் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருப்பார் திரிஷா.

89
திரிஷா பர்த்டே

திரிஷாவின் 42வது பிறந்தநாள்

கமல், அஜித், விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்த திரிஷா, பல வருடங்களுக்குப் பிறகே பேட்ட திரைப்படத்தின் மூலம் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடித்தார். திரைப்படம் தாண்டி யோகா, செல்லப்பிராணிகள், வெளிநாடு சுற்றுலா என திரிஷாவுக்கு பிடித்த பக்கங்கள் ஏராளம், வெறும் பாட்டுக்கும், கவர்ச்சிக்கும் மட்டுமே கதாநாயகிகள் என்பதை உடைத்து, படத்துக்கு பலமாக நின்று இன்றும் சினிமாவில் முன்னணி நடிகையாக நீடிக்கும் திரிஷா இன்று தனது 42வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்து மழை பொழிந்த வண்ணம் உள்ளது.

99
திரிஷா கார் கலெக்‌ஷன்

திரிஷா சொத்து மதிப்பு

தமிழ் சினிமாவின் பணக்கார நடிகைகளில் ஒருவரான திரிஷாவின் சொத்து மதிப்பு ரூ.130 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. இவர் ஒரு படத்திற்கு ரூ. 12 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறார். மேலும் இவருக்கு சொந்தமாக சென்னை மற்றும் ஐதராபாத்தில் சொகுசு வீடுகள் உள்ளன. அதன் மதிப்பு மட்டும் ரூ.16 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. இவரிடம் பென்ஸ், பி.எம்.டபுள்யூ, ரேஞ்ச் ரோவர் போன்ற விலையுயர்ந்த சொகுசு கார்களும் உள்ளன.

Read more Photos on
click me!

Recommended Stories