Gayathri Reddy :ரகசியமாக நடந்து முடிந்த பிகில் பட நடிகையின் நிச்சயதார்த்தம்! போட்டோ பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்

Published : May 01, 2022, 12:46 PM IST

Gayathri Reddy : நடிகர் அர்ஜுன் தொகுத்து வழங்கிய சர்வைவர் என்கிற ரியாலிட்டி ஷோவில் போட்டியாளராக கலந்துகொண்டு டஃப்பான போட்டியாளராக வலம் வந்தவர் காயத்ரி ரெட்டி.

PREV
14
Gayathri Reddy :ரகசியமாக நடந்து முடிந்த பிகில் பட நடிகையின் நிச்சயதார்த்தம்! போட்டோ பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்த படம் பிகில். கடந்த 2019-ம் ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு வெளியான இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. இப்படத்தில் நடிகர் விஜய், மைக்கேல் மற்றும் ராயப்பன் ஆகிய இரண்டு வேடங்களில் நடித்திருந்தார். இதில் மைக்கேல் கதாபாத்திரத்தில் கால்பந்தாட்ட வீரராகவும், பின்னர் மகளிர் கால்பந்தாட்ட அணிக்கு பயிற்ச்சியாளராகவும் நடித்திருந்தார் விஜய்.

24

இதில் விஜய்யிடம் பயிற்சி பெறும் வீராங்கனைகள் கதாபாத்திரத்தில் ரெபா மோனிகா ஜான், காயத்ரி ரெட்டி, அம்ரிதா ஐயர், இந்துஜா, இந்திரஜா, வர்ஷா பொல்லம்மா ஆகியோர் நடித்திருந்தனர். இதில் ஏராளமானோர் இப்படத்துக்கு பின் ஹீரோயினாக நடித்து வருகின்றனர். சிலர் ரியாலிட்டி ஷோக்களிலும் கலக்கி வருகின்றனர்.

34

அந்த வகையில், நடிகர் அர்ஜுன் தொகுத்து வழங்கிய சர்வைவர் என்கிற ரியாலிட்டி ஷோவில் போட்டியாளராக கலந்துகொண்டு டஃப்பான போட்டியாளராக வலம் வந்த காயத்ரி ரெட்டி, தற்போது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகி உள்ளனர். 

44

ஏனெனில் அவர் தனக்கு திருமணம் நிச்சயமாகி உள்ளதாக பதிவிட்டு, தனது வருங்கால கணவருடன் எடுத்த புகைப்படங்களை பதிவிட்டு உள்ளார். கடந்த ஏப்ரல் 29-ந் தேதி நிச்சயமானதாக காயத்ரி குறிப்பிட்டுள்ளார். எளிமையாக நடைபெற்றுள்ள இவர்களது திருமண நிச்சயதார்த்ததில் குடும்பத்தினர் மட்டுமே கலந்துகொண்டதாக கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்... suriya new movie : மீண்டும் சயின்ஸ் பிக்சன் கதையில் நடிக்கும் சூர்யா... இயக்கப்போவது யார் தெரியுமா?

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories