suriya new movie : மீண்டும் சயின்ஸ் பிக்சன் கதையில் நடிக்கும் சூர்யா... இயக்கப்போவது யார் தெரியுமா?

Published : May 01, 2022, 11:30 AM IST

suriya new movie : பாலா, வெற்றிமாறன், சிவா, சுதா கொங்கரா போன்ற முன்னணி இயக்குனர்களின் படங்களை கைவசம் வைத்துள்ள சூர்யா, தற்போது சயின்ஸ் பிக்சன் படத்தில் நடிக்க கமிட் ஆகி உள்ளாராம்.  

PREV
14
suriya new movie : மீண்டும் சயின்ஸ் பிக்சன் கதையில் நடிக்கும் சூர்யா... இயக்கப்போவது யார் தெரியுமா?

எதற்கும் துணிந்தவன் படத்தின் வெற்றிக்கு பின்னர் நடிகர் சூர்யா நடிப்பில் தற்போது பாலா இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். தற்காலிகமாக சூர்யா 41 என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்து வருகிறார். 2டி நிறுவனம் சார்பாக சூர்யா - ஜோதிகா இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

24

இதையடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாக உள்ள வாடிவாசல் படத்தில் நடிக்க உள்ளார் சூர்யா. கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கும் இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்க உள்ளார். ஜல்லிக்கட்டை மையமாக வைத்து உருவாகும் இப்படத்திற்காக நடிகர் சூர்யா பிரத்யேக பயிற்சி எடுத்து நடிக்க உள்ளார்.

34

இதுதவிர சுதா கொங்கரா இயக்கத்தில் ஒரு படத்திலும் சிறுத்தை சிவா இயக்கத்தில் ஒரு படத்திலும் நடிக்க கமிட் ஆகி உள்ளார் சூர்யா. இதில் சுதா கொங்கரா இயக்கும் படம் உண்மை சம்பவத்தை மையமாக வைத்தும், சிவா இயக்கும் படம் பக்கா கமர்ஷியல் கதையம்சம் கொண்டதாகவும் தயாராக உள்ளதாக கூறப்படுகிறது.

44

இந்நிலையில், நடிகர் சூர்யா மேலும் ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகி உள்ளாராம். அதன்படி விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான இன்று நேற்று நாளை படத்தின் இயக்குனர் ரவிக்குமார் இயக்கும் சயின்ஸ் பிக்சன் படத்தில் ஹீரோவாக நடிக்க உள்ளாராம் சூர்யா. ஏற்கனவே 24, ஏழாம் அறிவு, மாற்றான் போன்ற சயின்ஸ் பிக்சன் படங்களில் சூர்யா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்...  Pooja Hegde : ஹாட்ரிக் தோல்வி... ராசியில்லாத நடிகையான பூஜா ஹெக்டே - ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்

Read more Photos on
click me!

Recommended Stories