HBD Ajith : ஆசை நாயகன் அல்டிமேட் ஸ்டார் ஆனது எப்படி? - அஜித்தின் அரிய புகைப்படங்களும்... ஆச்சர்ய தகவல்களும்

Published : May 01, 2022, 09:50 AM IST

HBD Ajith : சினிமாவில் அசைக்க முடியாத இடத்தை பிடித்த ஒரு சில நடிகர்களில் அஜித்குமாரும் ஒருவர். எந்த ஒரு பின்புலமும் இன்றி, திரையுலகில் பல்வேறு தடைகளைக் கடந்து ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்தவர் அஜித். இன்று அவருக்கு 51-வது பிறந்த நாள். வழக்கம் போல் அஜித் பிறந்தநாளை அவரது ரசிகர்கள் சிறப்பாக கொண்டாடி வருகிறார்கள்.  பலரும் பார்த்திடாத நடிகர் அஜித்தின் அரிய புகைப்படங்களின் தொகுப்பை தற்போது காணலாம்...

PREV
111
HBD Ajith : ஆசை நாயகன் அல்டிமேட் ஸ்டார் ஆனது எப்படி? - அஜித்தின் அரிய புகைப்படங்களும்... ஆச்சர்ய தகவல்களும்

ஐதராபாத்தில், கடந்த 1971 ஆம் ஆண்டு மே மாதம் 1 ஆம் தேதி, பாலக்காடு சுப்ரமணிய அய்யர் - மோகினி தம்பதிக்கு இரண்டாவது மகனாக, பிறந்தவர் அஜித்.

211

நடிகர் அஜித், பிறந்தது ஐதராபாத்தாக இருந்தாலும், அவர் வளர்ந்ததெல்லாம் சென்னையில் தான். ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள ஆசான் மெமோரியல் பள்ளியில் தனது பள்ளி படிப்பைத் தொடங்கினார் அஜித்குமார். 

311

படிப்பின் மீது பெரிய அளவில் ஆர்வம் இல்லாத அஜித். எப்போதுமே துறுதுறுவென இருப்பாராம். குறிப்பாக தனக்கு என்ன பிடிக்கிறதோ அதை மட்டுமே செய்யும் இயல்பு கொண்டவராக இருந்து வந்துள்ளார்.

411

இதன்காரணமாக பள்ளி படிப்பை பாதியிலேயே நிறுத்திக்கொண்ட அஜித், மெக்கானிக் சம்பந்தமான படிப்பைத் தேர்ந்தெடுத்து படித்தது மட்டுமின்றி, பைக் மெக்கானிக்காகவும் வேலை பார்த்து வந்தார். கார், பைக் ஓட்டுவதில் அன்று முதல், இன்று வரை நடிகர் அஜித்துக்கு அலாதி பிரியம்.

511

நடிகர் அஜித்தின் வசீகர தோற்றம் அவரை திரையுலகின் பக்கம் கொண்டு வந்தது. ஆரம்பத்தில் விளம்பரப் படங்களில் நடித்து சம்பாதித்து வந்த அஜித், பின்னர் திரையுலகில் நுழைந்தார். 

611

கார் ரேஸிங் மற்றும் சினிமா என இரண்டிலும் கவனம் செலுத்தி வந்த நடிகர் அஜித் ஒரு கட்டத்தில், சினிமாவை தன்னுடைய தொழிலாகத் தேர்வு செய்து அதில் கவனம் செலுத்த தொடங்கினார்.

711

தன்னுடைய 20 வது வயதில், முதன்முதலில் தெலுங்குப் படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமான அஜித், அப்படத்தின் இயக்குனர் திடீரென மரணமடைந்ததால், அப்படம் கைவிடப்பட்டு, அதில் நடிக்கும் வாய்ப்பும் நழுவியது. பின்னர், 1992-ம் ஆண்டு பிரேம புஸ்தகம் என்கிற தெலுங்கு படத்தின் மூலம் அறிமுகமானார் அஜித். முதல் படத்திலேயே திறம்பட நடித்த அவருக்கு சிறந்த புதுமுகத்திற்கான விருதும் கிடைத்தது.

811

பின்னர் அதே ஆண்டில், செல்வா இயக்கத்தில், தமிழில் உருவான அமராவதி படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இதுவே, தமிழ் திரையுலகில் அவர் நடித்த முதல் படமாகும். இதையடுத்து 1995-ம் ஆண்டு வஸந்த் இயக்கத்தில் வெளிவந்த ஆசை திரைப்படம் அஜித்துக்கு பெரும் திருப்புமுனையாக அமைந்தது.

911

ஆசை படத்திற்கு பிறகு அஜித்துக்கான ரசிகர்களும் அதிகரிக்க துவங்கினர். ஆரம்பத்தில் காதல் படங்களில் நடித்து வந்தாலும், பின்னர் படிப்படியாக ஆக்‌ஷன் படங்களிலும் கவனம் செலுத்தினார். ஆக்‌ஷன் காட்சிகளில் டூப் போடாமல் நடிப்பதே இவரது ஸ்பெஷல். அதை இன்றளவும் கடைபிடித்து வருகிறார்.

1011

சினிமாவில் முன்னணி நடிகராக உயர்ந்த பின்னரும், கார் மற்றும் பைக் ரேஸ் மீதான ஆர்வத்தை நடிகர் அஜித் கைவிடவில்லை. இதனால் பல முறை விபத்தில் சிக்கி காயமடைந்த போதிலும், பீனிக்ஸ் பறவை போல் மீண்டு வந்து சாதித்துக் காட்டியவர் அஜித்.

1111

நடிகர் அஜித், தனக்கான ரசிகர் மன்றங்களை களைத்த பின்பும், அதனை நற்பணி மன்றங்களாக மாற்றிய அஜித் ரசிகர்கள், அதன்மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார்கள். அந்த வகையில் இன்று நடிகர் அஜித்தின் 51-ஆவது பிறந்தநாளை ஆரவாரத்துடன் கொண்டாடி வருகிறார்கள்.

இதையும் படியுங்கள்... HBD Ajith : உழைப்பால் உயர்ந்தவர்... அஜித்துக்கு முதல் ஆளாக வாழ்த்து சொன்ன அரசியல் பிரபலம்

click me!

Recommended Stories