Pooja Hegde : ஹாட்ரிக் தோல்வி... ராசியில்லாத நடிகையான பூஜா ஹெக்டே - ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்

Published : May 01, 2022, 10:43 AM ISTUpdated : May 01, 2022, 10:50 AM IST

Pooja Hegde : நடிகை பூஜா ஹெக்டே நடிப்பில் கடைசியாக வெளியான 3 படங்களும் தோல்வியை சந்தித்ததால் நெட்டிசன்கள் அவரை ட்ரோல் செய்து வருகின்றனர்.

PREV
14
Pooja Hegde : ஹாட்ரிக் தோல்வி... ராசியில்லாத நடிகையான பூஜா ஹெக்டே - ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்

ஜீவா நடிப்பில் கடந்த 2012-ம் ஆண்டு வெளியான முகமூடி படம் மூலம் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. முதல்படமே தோல்வியை சந்தித்ததால், டோலிவுட் பக்கம் ஒதுங்கிய அவர், அங்கு நடித்த படங்கள் ஒவ்வொன்று பிளாக்பஸ்டர் ஹிட் ஆனதம் மூலம் பாப்புலர் ஆனார். இதையடுத்து பாலிவுட்டிலும் கலக்கிய அவர் தற்போது பான் இந்தியா நடிகையாக வலம் வருகிறார்.

24

இவர் நடிப்பில் கடந்த மார்ச் மாதம் வெளியான படம் ராதே ஷ்யாம். ராதா கிருஷ்ண குமார் இயக்கியிருந்த இப்படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக நடித்திருந்தார் பூஜா ஹெக்டே. சுமார் 400 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாராகி இருந்த இப்படம் படுதோல்வியை சந்தித்தது. பாக்ஸ் ஆபிஸில் மரண அடி வாங்கிய இப்படம் ரூ.100 கோடிக்கு மேல் நஷ்டத்தை சந்தித்தது.

34

இதையடுத்து பூஜா ஹெக்டே நடிப்பில் கடந்த மாதம் பீஸ்ட் திரைப்படம் வெளியானது. நெல்சன் இயக்கியிருந்த இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார் பூஜா. தமிழ் புத்தாண்டை ஒட்டி வெளியான இப்படம் பாக்ஸ் ஆபிஸில் 200 கோடிக்கு மேல் வசூலித்தாலும் விமர்சன ரீதியாக கடும் தோல்வியை சந்தித்தது.

44

இவ்வாறு அடுத்தடுத்து 2 தோல்வி படங்களில் நடித்த பூஜா ஹெக்டே, சிரஞ்சீவியின் ஆச்சார்யா படத்தின் மூலம் வெற்றிப் பாதைக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்டது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியான இப்படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக நடித்திருந்தார் பூஜா ஹெக்டே. இப்படமும் தோல்வியை சந்தித்ததால், ராசியில்லாத நடிகை என நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றன. ஹாட்ரிக் தோல்வியால் நடிகை பூஜா ஹெக்டேவின் மார்க்கெட்டும் கடும் சரிவை சந்தித்துள்ளது.

இதையும் படியுங்கள்... HBD Ajith : ஆசை நாயகன் அல்டிமேட் ஸ்டார் ஆனது எப்படி? - அஜித்தின் அரிய புகைப்படங்களும்... ஆச்சர்ய தகவல்களும்

Read more Photos on
click me!

Recommended Stories