BiggBoss Ultimate : பலே திட்டத்துடன் களமிறங்கும் சிம்பு... இந்த வார எலிமினேஷனில் இப்படி ஒரு டுவிஸ்ட் இருக்கா?

Ganesh A   | Asianet News
Published : Mar 04, 2022, 07:50 AM IST

BiggBoss Ultimate elimination : பிக்பாஸ் நிகழ்ச்சியின் விதிப்படி ஒவ்வொரு வார இறுதியிலும் மக்கள் அளிக்கும் வாக்குகள் அடிப்படையில் குறைவான வாக்குகளை பெறும் போட்டியாளர் வெளியேற்றப்படுவது வழக்கம். தற்போது பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் அதே நடைமுறை பின்பற்றப்படுகிறது.

PREV
16
BiggBoss Ultimate : பலே திட்டத்துடன் களமிறங்கும் சிம்பு... இந்த வார எலிமினேஷனில் இப்படி ஒரு டுவிஸ்ட் இருக்கா?

தமிழில் தற்போது முதன்முறையாக ஓடிடி தளத்துக்காக மட்டும் பிரத்யேகமாக பிக்பாஸ் (BiggBoss) நிகழ்ச்சி ஒன்று நடத்தப்படுகிறது. ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்துக்காக நடத்தப்படும் இந்நிகழ்ச்சியை கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்குகிறார். பிக்பாஸ் அல்டிமேட் (BiggBoss Ultimate) என பெயரிடப்பட்டு உள்ள, இந்நிகழ்ச்சி 24 மணிநேரமும் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.

26

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி கடந்த ஞாயிறன்று பிரம்மாண்டமாக தொடங்கியது. இந்நிகழ்ச்சியில் சினேகன், சுஜா வருணி, ஜூலி, தாடி பாலாஜி, ஷாரிக், அபிராமி, வனிதா, அனிதா, சுரேஷ் சக்ரவர்த்தி, பாலாஜி முருகதாஸ், சுருதி, நிரூப், தாமரைச் செல்வி, அபிநய் என மொத்தம் 14 போட்டியாளர்கள் களமிறங்கி உள்ளனர். 

36

ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்துக்காக நடத்தப்படும் இந்நிகழ்ச்சியை முதல் 3 வாரம் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். இதையடுத்து படப்பிடிப்பு பணிகள் காரணமாக அவர் விலகியதால், கடந்த வாரம் முதல் நடிகர் சிம்பு பிக்பாஸ் அல்டிமேட் (BiggBoss Ultimate) நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். 

46

பிக்பாஸ் நிகழ்ச்சியின் விதிப்படி ஒவ்வொரு வார இறுதியிலும் மக்கள் அளிக்கும் வாக்குகள் அடிப்படையில் குறைவான வாக்குகளை பெறும் போட்டியாளர் வெளியேற்றப்படுவது வழக்கம். தற்போது பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் அதே நடைமுறை பின்பற்றப்படுகிறது.

56

பிக்பாஸ் அல்டிமேட்டில் இதுவரை சுரேஷ் சக்ரவர்த்தி, சுஜா வருணி, ஷாரிக், அபிநய் ஆகியோர் எலிமினேட் ஆகி உள்ளனர். இதுதவிர வனிதா கடந்த வாரம் தாமாகவே வெளியேறினார். இதன் காராணமாக கடந்த வாரம் யாரும் எலிமினேட் செய்யப்படவில்லை.

66

ஆனால் இந்த வாரம் கண்டிப்பாக எலிமினேஷன் இருக்கும் என சிம்பு (Simbu) கடந்த வாரமே கூறி இருந்தார். அதன்படி மக்கள் அளித்த வாக்குகள் அடிப்படையில் சினேகன் மற்றும் தாடி பாலாஜி ஆகியோர் குறைவான வாக்குகளை பெற்றுள்ளனர். ஆதலால் இந்த வாரம் இவர்கள் இருவரில் ஒருவர் எலிமினேட் செய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி இந்த வாரம் டபுள் எவிக்‌ஷன் இருப்பதற்கும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்... என்ன பிக்பாஸ் இதெல்லாம்... ஸ்மோக்கிங் ரூமில் நெருக்கமாக இருந்த ஜோடி! பார்த்து பதறிப்போன நிரூப்- ஷாக்கிங் video

Read more Photos on
click me!

Recommended Stories