விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பகல் நிலவு சீரியல் மூலமாக ரசிகர்களிடையே பிரபலமானவர் ஷிவானி. சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக வலம் வரும் ஷிவானி தினந்தோறும் தன்னுடைய லேட்டஸ்ட் புகைப்படங்களை தவறாமல் பகிர்ந்து வருகிறார்.
25
முன்பெல்லாம் சரியாக 4 மணிக்கு இன்ஸ்டாகிராமில் லேட்டஸ்ட் போட்டோ ஷூட்களை போட்டே ஆக வேண்டும் என்ற அளவுக்கு தீவிரமாக அதில் செயல்பட்டு வந்த இவர், தற்போது தன்னுடைய மிதமான கவர்ச்சியை வெளிப்படுத்தும் புகைப்படங்களை தான் வெளியிடுகிறார்.
35
சீரியல் மூலம் கிடைத்த பப்ளி சிட்டியை அடுத்து, ஷிவானி பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியில் ஷிவானி பெரிதாக எதையும் செய்யவில்லை என்றாலும் சுமார் 90 நாட்களுக்கு மேல் பிக்பாஸ் வீட்டில் நிலைத்து நின்று விளையாடினார்.
45
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய வேகத்தில் இவருக்கு எந்த படத்திலும் நடிக்க வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றாலும், தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வரும் விக்ரம் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
55
அடுத்தடுத்து பல படவாய்ப்புகளை பெற, கவர்ச்சியை குறைத்து அழகு ததும்பும் புகைப்படங்களை வெளியிட்டு வரும் ஷிவானி தற்போது பச்சை நிற பாவாடை தாவணியில், பளீச் என கொடுத்துள்ள போஸ் நெட்டிசன்களை வெகுவாக கவர்ந்துள்ளது.