சமீபத்தில் மலையாள நடிகர்களான மம்முட்டி மற்றும் மோகன்லால் ஆகியோருக்கு யுஏஇ அரசு கோல்டன் விசா வழங்கி கௌதவித்தது. இதைத் தொடர்ந்து பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி ரௌடாலா கோல்டன் விசா பெற்றார். இவர்களை தொடர்ந்து தற்போது பிரபல நடிகை மீரா ஜாஸ்மின், கோல்டன் விசா பெரும் முதல் தமிழ் நடிகை என்கிற பெருமையை பெற்றுள்ளார்.
யுஏஇ வழங்கும் கோல்டன் விசா என்பது அவ்வளவு எளிதில் யாருக்கும் கிடைத்துவிடாது. தங்களுடைய துறையில், சிறந்து விளங்குபவர்களுக்கு மட்டுமே இந்த கௌரவத்தை கொடுத்து வருகிறது ஐக்கிய அரபு அமீரகம். அந்த வகையில் தற்போது, பல்வேறு பாலிவுட் படங்களிலும், சமூக சேவை பணிகளிலும் ஈடுபட்டு வருபவர்கள், மற்றும் அந்நாட்டில் முதலீடு செய்யும் தொழிலதிபர்கள், திரையுலக நட்சத்திரங்கள் போன்றோருக்கு இந்த விசா வழங்கப்பட்டு வருகிறது.
இந்த விசாவுக்கு பல சிறப்புகள் உள்ளன. கோல்டன் விசா வைத்திருப்பவர்கள், எவ்வித கட்டுப்பாடுகளுமின்றி ஐக்கிய அரபு அமீரகத்தில் தங்கவும், எவ்வித தடையும் இன்றி வேலை செய்யவும் அனுமதிக்கப்படுவார்கள். அவர்களும் ஐக்கிய சிட்டிசன்களுக்கு நிகராகவே கருதப்படுவார்கள்.
இந்த விசா ஒவ்வொருவருக்கும் 5 அல்லது 10 ஆண்டுகள் புதுப்பிக்கும் வகையில் வழங்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே இந்த கோல்டன் விசாவை பிரபல பாலிவுட் நடிகர்களான ஷாருக்கான், சஞ்சய் தத் ஆகியோர் வைத்திருக்கும் நிலையில், அவர்களைத் தொடர்ந்து மோகன்லால் மற்றும் மம்முட்டி ஆகியோர்களுக்கு வழங்கப்பட்டது.
ஆனால் இதுவரை எந்த ஒரு நடிகைக்கும் ஐக்கிய அரபு அமீரகம் இந்த கோல்டன் விசா வழங்காத நிலையில் முதல் முறையாக நடிகை, ஊர்வசி ரௌடாலாவுக்கு சமீபத்தில் வழங்கப்பட்டது. இதன் மூலம் கோல்டன் விசா பெரும் முதல் இந்திய நடிகை என்கிற பெருமையும் இவருக்கு கிடைத்துள்ளது.
இவரை தொடர்ந்து தற்போது தமிழின் மாதவனுக்கு ஜோடியாக தமிழில் அறிமுகமான நடிகை மீரா ஜாஸ்மினுக்கு வழங்கப்பட்டுள்ளார். தமிழ், மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில்.. விஜய், அஜித், விஷால் என ரவுண்டு கட்டி நடித்து ரசிகர்கள் மனதில் நிலையான இடத்தை பிடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.