kavin marriage
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் கவின். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உருவானது. பிக்பாஸுக்கு முன்னர் வரை தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து வந்த கவினுக்கு சினிமாவில் திருப்புமுனையை ஏற்படுத்தியது பிக்பாஸ் நிகழ்ச்சி தான். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் கவின் நடித்த முதல் படம் லிஃப்ட். இப்படம் திரையரங்கில் ரிலீஸ் ஆகாவிட்டாலும், ஓடிடியில் வெளியாகி அமோக வரவேற்பை பெற்றது.
லிஃப்ட் படத்தின் வெற்றிக்கு பின்னர் கவின் நடித்த திரைப்படம் டாடா. எமோஷனலான காதல் கதையம்சம் கொண்ட இப்படத்தில் யதார்த்த நடிப்பை வெளிப்படுத்தி வெற்றியும் கண்டார் கவின். இப்படம் கடந்த பிப்ரவரி மாதம் திரைக்கு வந்தது. இந்த ஆண்டு வெளியாகி பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடித்த படங்களில் டாடாவும் ஒன்று. இதையடுத்து கவினின் மார்க்கெட் ஜெட் வேகத்தில் உயர்ந்துவிட்டது. தற்போது அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்து வருகிறார் கவின்.
இதையும் படியுங்கள்... பழனி படிக்கட்டு மாதிரில இருக்கு... சிக்ஸ் பேக் உடன் மிரள வைக்கும் சூர்யா - வைரலாகும் போட்டோ
kavin marriage
இதனிடையே கடந்த மாதம் கவின் திருமணம் குறித்த அறிவிப்பு வெளியானது. அதன்படி அவர் மோனிகா டேவிட் என்பவரை திருமணம் செய்துகொள்ள உள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில், இன்று கவின் - மோனிகா டேவிட் ஜோடியின் திருமணம் சென்னையில் உள்ள பார்க் ஹயாட் ஓட்டலில் வைத்து நடைபெற்று உள்ளது. இந்த திருமணத்தில் குடும்பத்தினரும், நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டுள்ளனர்.
kavin marriage
கவினின் திருமணத்தில் கலந்துகொண்ட குக் வித் கோமாளி பிரபலம் புகழ், கவின் - மோனிகா ஜோடியுடன் எடுத்த புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையடுத்து ஏராளமான ரசிகர்களும் புது மாப்பிள்ளை கவினுக்கு வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... அஜித்தின் விடாமுயற்சி படத்தை கைவிடுகிறதா லைகா?... கோலிவுட்டில் தீயாய் பரவும் தகவல்